"நோ சான்ஸ்".. ஸ்டாலின் இன்னைக்கு "இதான்" சொல்ல போறாரு.. நிலக்கரி சுரங்க விவகாரம்.. கதிகலங்கும் டெல்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் சட்டப்பேரவை நிகழ்வின்போது, நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார் என தெரிகிறது.. மேலும், இந்த திட்டம் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டையும், தமிழக அரசின் நிலைப்பாட்டையும் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதைத்தவிர, நெய்வேலிக்கு பக்கத்தில் இன்னொரு சுரங்கத்தை அமைக்க முடிவாகி உள்ளது.. அதாவது, வருடத்துக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ.3556 கோடி செலவில் அமைக்க என்எல்சி இந்தியா நிர்வாக குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

 நிலக்கரி திட்டம்

நிலக்கரி திட்டம்

இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்எல்சி கையகப்படுத்த போவதாக தெரிகிறது.. இந்த 3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பாலான பகுதி, காவிரி படுகையை ஒட்டியே அமைய போவதாகவும் சொல்கிறார்கள்.. இதைத்தவிர, 4வதாக, வீராணம் நிலக்கரித் திட்டம், 6வதாக, பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், 7வதாக, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், 8வதாக, தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், 9வதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன..

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இவைகளில், ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடும்..அதிலும், இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. அதனால்தான், விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர்.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க கூடாது என்றம் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்..

 தலையில் இடி

தலையில் இடி


ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது என்றும் விவசாயிகள் அச்சமும், வேதனையும், கவலையும் தெரிவித்து வருகிறார்கள்.. இதுகுறித்து, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, "மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்..

 பழுப்பு நிலக்கரி

பழுப்பு நிலக்கரி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் "கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதனிடையே, திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலினும், "புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள திருவாரூர், தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்" என்றார்.

 பதிலடி ஸ்டாலின்

பதிலடி ஸ்டாலின்

அந்தவகையில், இன்றைய தினம் சட்டப்பேரவை நிகழ்வின்போது, நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார் என்று நம்பப்படுகிறது.. அப்போது, இது தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டையும், தமிழக அரசின் நிலைப்பாட்டையும் இன்றைய தினம் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. பேரவையில் யாராவது இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தால், அப்போது அதன் மீதான பதிலையும், விளக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் தருவார் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு, விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+