அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா? அல்லது பதவி நீக்கம்? நீதிமன்ற காவலை அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வாரா அல்லது அவரின் துறைகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

17 மணி நேர ரெய்டை தொடர்ந்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது.
அதன்படி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி சற்று நேரத்திற்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவரின் அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இதையடுத்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று வாதம் வைத்தனர்.
சிகிச்சை அறையிலேயே நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. ஆனால் செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை. அதேபோல் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் வைத்துள்ளார்.
வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு உள்ளதால் உடனே செந்தில் பாலாஜி தரப்பு சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதன் வாதங்கள் சற்று நேரத்தில் கோர்ட்டில் நடக்க வாய்ப்பு உள்ளது. அதே போல அமலாக்கத்துறை தங்கள் கஸ்டடியில் செந்தில் பாலாஜி வர வேண்டும் என்றும் வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வாரா அல்லது அவரின் துறைகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக அமைச்சர்கள் சிறைக்கு சென்றால்.. அவர்கள் ராஜினாமா செய்வார்கள்.
இங்கே அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தாலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால் அவர் சிறைக்கு சென்றதாகவே கருதப்படும். அதனால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வாரா அல்லது அவரின் துறைகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கியமாக அமைச்சரவை மாற்றப்பட்டலும், பாலாஜியை, இலாகா இல்லாத மந்திரியாக வைத்திருக்கவும் யோசிக்கிறார் ஸ்டாலின் என்று கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு (டாஸ்மாக்) மற்றும் மின்சாரம் என்று இரண்டு முக்கிய பொறுப்புகளை வகிப்பதால், அவர் சிறையில் இருக்கும் போது அதை கூடுதல் பொறுப்பாக ஒருவர் கவனித்தே ஆக வேண்டும் என்பதால் கண்டிப்பாக அமைச்சரவை பொறுப்பு கூடுதலாக ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி கே.என்.நேரு அல்லது தங்கம் தென்னரசு வசம் மின்சாரத்துறை மட்டும் கூடுதல் பொறுப்பாக தரப்படலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர். அதாவது சீனியர்களில் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, நேரு கடும் முயற்சி. குறிப்பாக இவர்கள் மின்சாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், மின்சாரத்தை உதயநிதி அல்லது பி.டி.ஆரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்க முதல்வர் யோசிப்பதாக தகவல். அதே சமயம் மதுவிலக்கு யார் வசம் என்ற தகவல் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications