"பிரிச்சி எடுங்க".. ரேஷனில் இனி "இதுவும்" கிடைக்குமா.. அப்படின்னா பாமாயில்?.. தமிழக அரசு முடிவு என்ன?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு சலுகையாக, பொருட்கள் விநியோகிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், விவசாயிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளனர்.
4 மாதங்களுக்குமுன்பு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுவது குறித்து கூறியிருந்தார்.

அதில், "தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... அதன்படி, முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
விவசாயிகள் வேதனை: இதனிடையே, உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் என முக்கியமான அமைப்புகள் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்தன. அதில், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதுமட்டுமல்லாமல், தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
ரேஷன் கடைகள்: தமிழக தேங்காய் விவசாயிகளிடம் இருந்தே, தேங்காய்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யாக மக்களுக்கு கொடுக்க வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை வேண்டும்" என்றும் விவசாய சங்கங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
இதற்கு நடுவில், டெல்லியில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சந்தித்து, தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில், தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
மத்திய அரசு உறுதி: இதற்கு மத்திய அமைச்சர் சம்மதமும் தெரிவித்துவிட்டதாகவும், முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும்... மக்கள் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படும் என்று மத்திய வேளாண் இணை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்" என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இப்போதுகூட, கொப்பரை தேங்காய்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், தேங்காய் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேங்காய்கள்: கடமலை, மயிலை ஒன்றியத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் தேங்காய்கள் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் தேங்காய் விலை சரிவடைந்து உள்ளதால் ஒரு தேங்காய்க்கு ரூபாய் 7 முதல் 8 வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த 2022ம் ஆண்டு கொப்பரை தேங்காய் ரூபாய் 17 முதல் ரூ.18 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது கடும் விலை சரிவை சந்தித்துள்ளது விவசாயிகள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம். எனவே, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை தடை செய்து, தேங்காய் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு: இப்படி நாலாபக்கமிருந்தும் நெருக்கடிகள் வருவதால், ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை வழங்க, விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தேங்காய் எண்ணெய்யை வழங்கினால், பாமாயிலை நிறுத்திவிடுமா என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications