மாஸ் “மிளகாய்” திட்டம்.. 1000 ஹெக்டர் சீமை கருவேல மரங்களை வெட்டும் அரசு! வேளாண் பட்ஜெட்டில் அதிரடி
"சீமைக்கருவேல மரங்கள் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறையுடன் ஒருங்கிணைந்து அகற்றப்பட்டு, மிளகாய் சாகுபடி செய்யப்படும்."
சென்னை: 1,000 எக்டர் பரப்பிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறையுடன் ஒருங்கிணைந்து அகற்றப்பட்டு, மிளகாய் சாகுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "மதுரைக்கும் மல்லிகைக்குமான தொடர்பு, இன்று நேற்றல்ல. சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. எனவே மல்லிகைக்குப் புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்ததாகும்.
மல்லிகை மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும்.

மதுரை மல்லி
குறிப்பாக, பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும். இத்திட்டம் தொடர் திட்டமாக ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்தொகுப்பிற்குத் தேவையான தரமான மல்லிகைச் செடிகளை இராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வழிவகை செய்யப்படும்.

ரூ.7 கோடி நிதி
மல்லிகை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கவாத்து செய்யவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

பலா இயக்கம்
தமிழ்நாட்டின் மாநிலப் பழம் என்ற பெருமை கொண்டது பலா. கடலூர் மாவட்டம். அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே உரிய, பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நடவுச் செடிகள். இடுபொருட்கள், மதிப்புக் கூட்டுதலுக்கான கட்டமைப்புகள், உலகளாவிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பலா தொடர்பாக பன்னாட்டு வழங்கப்படும்.

2,500 எக்டர் பரப்பளவில் பலா சாகுபடி
கருத்தரங்குகள் நடத்துவதோடு. விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பில் பயிற்சிகளும் மேலும், பிற மாவட்டங்களில் அப்பகுதிகளுக்கு ஏற்ற புதிய இரகங்களை அறிமுகப்படுத்தி, பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 எக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும்.

ரூ.3 கோடி நிதி
இத்திட்டம், அரியலூர். கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி. புதுக்கோட்டை, சேலம், தென்காசி. தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். பலா தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, புதிய இரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் வலுப்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மிளகாய் மண்டலம்
மிளகாய், தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 எக்டர் பரப்பில் உற்பத்தியினை அதிகரிக்க பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 எக்டராக உயர்த்தி, இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். இப்பகுதியில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும், சேமித்து வைத்து சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டுதலுக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

சீமை கருவேல மரங்கள்
நீர் ஏற்படுத்தப்பட்டு நுண்ணீர்ப்பாசன ஆதாரம் இல்லாத இடங்களில் பண்ணைக் குட்டைகள் முறையில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாகுபடி வரும் ஆண்டு, இம்மாவட்டங்களில் 1,000 எக்டர் பரப்பிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறையுடன் ஒருங்கிணைந்து அகற்றப்பட்டு, மிளகாய் சாகுபடி செய்யப்படும்.

மிளகாய் பிளேக்ஸ்
மேலும், 1,000 எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் வழங்குவதோடு, மிளகாய்த்தூள், மிளகாய் பேஸ்ட் (Chili paste), மிளகாய் துகள்கள் (Chilli flakes) மிளகாய் எண்ணெய் (Chilli oil) போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவாக பதப்படுத்துதலும், மதிப்புகூட்டுதலும் செய்யும் கூடங்கள், சூரிய உலர்த்திக் கூடம், தூய்மையான முறையில் காய வைத்து சந்தைப்படுத்திட உலர் பாய் போன்றவை வழங்கப்படும். இத்திட்டம் வரும் ஆண்டில் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்." என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications