விட்ருங்க.. தப்பில்லை.. ஸ்டாலின் ஏன் இப்படி செய்யறாரு.. அமைச்சரிடம் புலம்பிய புள்ளிகள்.. பரபர திமுக

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரத்தில் தமிழக கட்சிகள் இறங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி குறித்த ஒரு செய்தி பரபரத்து வருகிறது.

இந்த முறை உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகிறது.. மொத்தம் 9 மாவட்டங்களில் தேர்தல் நடக்க உள்ளது.. இந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்களில் உள்ளன.

அதாவது இவைகள் பாமகவின் செல்வாக்கு பெற்ற மாவட்டங்கள்தான்.. இதனால் அதிமுக எப்படியும் இந்த முறை பாமகவை கூட்டணியில் இருந்து நழுவ விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டே தேர்தலை சந்திக்க உள்ளது.

பாமக

பாமக

எனவே, வடமாவட்டங்களில் இந்த முறை பிரதான ஓட்டு வங்கியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுத்து போடும் முயற்சியில் திமுக இறங்கி வருகிறது. அதற்கேற்றபடி கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றதுமே, இந்த யூகம் வலுவாகி விட்டது.

 பிரேமலதா

பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்துவிட்டு ஸ்டாலின் வந்த பிறகு, திமுகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதாவும், சுதீஷூம் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள். "நமது எதிரியான பாமகவுக்கும் துரோகியான அதிமுகவுக்கும் பாடம் புகட்ட திமுக கூட்டணியில் எப்படியும் இணைந்து விட வேண்டும்.. கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத இடங்களையாவது பெற வேண்டும். கூட்டணியை உறுதி செய்ய ஸ்டாலினின் மனைவி துர்காவிடம் தொடர்ச்சியாக பேசுங்கள்" என்று தன்னுடைய அக்கா அக்காள் பிரேமலதாவை வலியுறுத்தி வருகிறாராம் சுதீஷ்.

கூட்டணி

கூட்டணி

அதுமட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உறுதியானால் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கவலைப்பட தேவையில்லை... கூட்டணியை இறுக்கமாக்கிக் கொள்ளலாம்.. அதனால் முந்தைய காலங்களில் கூட்டணி விஷயத்தில் நடத்திய அணுகுமுறையை திமுகவிடம் காட்டக்கூடாது என்றும் சுதீஷ் அலர்ட் செய்துள்ளாராம்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

கூட்டணிக்கு தேமுதிக விருப்பப்படுவதை அறிந்த வடதமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், "விஜயகாந்த் மீது தலைவர் தளபதிக்கு உள்ள நட்பும் மரியாதையும் அவருக்கு அப்படியே இருக்கட்டும்... தப்பில்லை... அதுக்காக தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், திமுகவின் வெற்றி எங்களால்தான் நடந்தது என தேர்தல் முடிந்ததும் அந்தம்மாவும் அவரது தம்பியும் வீராவேசம் காட்டுவார்கள். அந்த நிலை நமக்கு வேண்டுமா?

 புலம்பல்கள்

புலம்பல்கள்

இத்தனைக்கும் அரை சதவீத வாக்குகளைதான் வைத்திருக்கிறார்கள்... அதனால், தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான விவாதம் வருகிறபோது அதனை ஆமோதிக்காதீர்கள்" என்று துரைமுருகனிடம் சந்தித்து வலியுறுத்தியுள்ளனராம்.. ஆனால், இந்த முறை திமுகவை அதிகமாக தேமுதிக நம்பிக் கொண்டுள்ள நிலையில், என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. ஒருவேளை உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கமுடியாது போனால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும் பிரேமலதா திட்டமிட்டுள்ளதாகவும் தேமுதிக வட்டாரம் கதைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+