"சாயும்" திமுக புள்ளி.. ஆசை ஆசையாய் நெருங்கிய பாஜக.. கடைசி நேரத்தில் நடந்த அந்த மேஜிக்.. என்னாச்சு?
திமுக எம்எல்ஏ பாஜகவில் சேரவில்லை என்று விளக்கம் தந்துள்ளார்
சென்னை: திமுகவில் இருந்து ஒரு விக்கெட் விழ போவதாகவும், அது விரைவில் பாஜகவில் இணைய போவதாகவும் தகவல்கள் பரபரத்து கிடக்கிறது.. உண்மையிலேயே என்ன நடந்தது? யார் அந்த எம்எல்ஏ?
சில மாதங்களுக்கு முன்பு, திமுக மூத்த தலைவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை, பாஜக தன் பக்கம் வளைத்து போட்டது.. இந்த இணைப்பு விழாவையும் சிறப்பாக கொண்டாடியது.
எந்த பொறுப்பிலும் இல்லாத சிவாவை, கட்சியில் சேர்த்து கொண்டதை ஒரு சாதனையாக பாஜக சொல்கிறதே என்று திமுக தரப்பில் கிண்டல்கள் வெளிவந்தன..

திருச்சி சிவா
ஆனால், இதற்கு பிறகு, திமுகவில் இருந்து மேலும் சிலர் பாஜக பக்கம் தாவுவார்கள் என்ற தகவல் பாஜக தரப்பில் இருந்தே வெளியானது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக இப்போதே கையில் எடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள்.. இதற்கு நடுவில், செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேசிய பேச்சு அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

40 எம்எல்ஏக்கள்
"மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும்.. தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது... அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது.. செந்தில் பாலாஜி 40 எம்எல்ஏக்களின் ஆதரவை வைத்துள்ளார் என தகவல்கள் வருகின்றன" என்று கொளுத்திப்போட்டார்.

மீடியா பரபரப்பு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திமுகவில் நிறைய தமிழ்நாட்டில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவார்.. யார் அது என்று கேட்டால் அதை ஊடகங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்று கிளப்பி விட்டார்.. இதனால், திமுகவில் அந்த எம்எல்ஏக்கள் யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும்நிலையில்தான், கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் பெயர் அடிபட்டது.. இவருக்கு தான் பாஜக குறி வைப்பதாக சொல்லப்பட்டது. காரணம், திமுக எம்எல்ஏவான அய்யப்பனை சில மாதங்களுக்கு முன்புதான் கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது..

வேட்பு மனு
கடலூர் மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்தல் கடந்த மார்ச் 4ம் தேதி நடைபெற்றபோது, மேயர் பதவிக்கு கட்சி அறிவித்த சுந்தரி ராஜாவிற்கு எதிராக திமுக போட்டி வேட்பாளர் கீதா குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார்... இதில் கீதா குணசேகரன் கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் ஆதரவாளர் ஆவார்.. இவரை மேயராக்கிவிட வேண்டும் என்று அய்யப்பன் முயன்றபோது, சுந்தரி ராஜா மேயராக வெற்றி பெற்றார்... தோல்வி அடைந்த கீதா குணசேகரன், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

கீதா குணசேகரன்
பின்னர் கீதா குணசேகரன் உடனடியாக காப்பாற்றப்பட்டாலும், அய்யப்பன் மீதான அதிருப்தி அங்கு வெடித்தது.. இந்த விவகாரம் கட்சி தலைமைக்கு தெரியவர, அதற்கு பிறகுதான், அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது. அப்போதிருந்தே அய்யப்பனுக்கு பாஜக குறி வைத்துவிட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன.. ஆனல், இதுவரை இந்த வதந்திகளுக்கு எந்தவிதமான விளக்கமும் சொல்லாமல் இருந்த அய்யப்பன், நேரடியாக செய்தியாளர்களையே சந்தித்து பேட்டி தந்திருக்கிறார்.

ஆசை வார்த்தைகள்
அவர் சொல்லும்போது, "நான் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு மற்றும் திமுகவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன்... சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க வதந்திதான்... இறக்கும்வரை தான் திமுகவில்தான் இருப்பேன்.. திமுக தலைமை தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும், அக்கட்சியில்தான் நீடிப்பேன்" என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

என்னாச்சு
பாஜகவில் அய்யப்பன் இணையபோவதாக பலமாக செய்திகள் அடிபட்ட நிலையில், திடீரென என்ன நடந்தது? என்பது தெரியவில்லை.. எனினும் இதுகுறித்து சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வட்டமடிக்கின்றன.. திமுகவில் இருந்து நீக்கப்பட்டதுமே, அய்யப்பன் கடுமையான அப்செட் ஆகிவிட்டாராம்.. எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்திருக்கிறார். இதைதான் பாஜக பயன்படுத்தி கொண்டு, அவரிடம் முயன்றதாக தெரகிறது.

பின்னணி மேட்டர்
"கட்சியில் இணைந்தால் எம்எல்ஏ பதவி பறிபோய்விடும் என்பதால் சட்டமன்றத்தில் அதிருப்தி திமுகவாகவும், பாஜக ஆதரவாளராகவும் செயல்படுங்கள்" என்று பாஜக தரப்பு சொன்னதாம்.. அய்யப்பனும் இதுகுறித்து தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இந்த விஷயம் கேள்விப்பட்ட திமுகவோ, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கட்சியில் இணையச் சொல்லி தூது விட்டதாம்.. அதனாலேயே அய்யப்பன் செய்தியாளர்களிடம் அப்படி பேட்டி தந்திருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆனாலும், பாஜக மனம் தளராமல், அடுத்த நபரை முயற்சிக்க காய் நகர்த்தி வருகிறதாம்..!
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications