Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே மேடையில் மல்லை சத்யா- துரை வைகோ! மதிமுக நிர்வாகக் குழு அறிக்கையில் இப்படி இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகிய நிலையில் நிர்வாகக் குழு கூட்ட தீர்மான அறிக்கையில் அவரது ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்காததால் முதன்மை செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வைகோவுடன் ஆலோசனை நடத்திய மல்லை சத்யா, அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யா, நீண்ட காலமாக வைகோவுடன் பயணித்து வருகிறார். அவர் எந்த சமரசமும் இன்றி வைகோதான் எல்லாமே என நினைத்து பயணிக்கிறார்.

durai vaiko mdmk mallay sathya

வைகோ எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் அவர் இதுவரை எதிர்த்து பேசியதில்லை என்கிறார்கள். திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய போது எத்தனையோ பேர் திமுகவில் இருந்துவிட்ட நிலையில் அவருடன் அப்போதிலிருந்து எந்த கட்சிக்கும் செல்லாமல் பயணிப்பவர் மல்லை சத்யா. இவருக்கு எத்தனையோ ஆஃபர்கள் வந்த போதிலும் அதை மறுத்துவிட்டு வைகோவுக்காக தொடர்ந்து மதிமுகவில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நிர்வாக ரீதியாக துரை வைகோ எடுத்த சில முடிவுகள் மல்லை சத்யாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. அது அண்மைக்காலமாக வெடித்தது. இந்த நிலையில் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என திருச்சியில் கூட கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆனால் அதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு எதிராக யாரும் செயல்படக் கூடாது என தொண்டர்களுக்கு வைகோ உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்தான் துரை வைகோ கட்சி பதவியிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கட்சியை சிதைக்கும் வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்றெல்லாம் மல்லை சத்யா பெயரை குறிப்பிடாமல் துரை வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தலைமைக் கழக செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள முடியாமல் 4 ஆண்டுகளாக இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மை செயலாளர் என பணியாற்ற விரும்பவில்லை என கூறி கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து துரை வைகோவின் இந்த முடிவை டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என வைகோவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வைகோவின் அண்ணா நகர் வீட்டிற்கு சென்ற துரை வைகோ அங்கு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை வைகோ சந்தித்த போது துரை வைகோ விலகல் குறித்து நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை சொல்வார்கள். நிர்வாக குழு கூட்டத்தை கூட்டியதற்கான காரணம் கட்சியின் அடுத்த கட்ட போராட்டம், மாநாடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காகத்தான்!

அந்த கூட்டத்தில் துரை வைகோ விஷயத்தையும் ஆலோசிப்போம். இதை தவிர வேறு எதை கேட்டாலும் நான் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்றார். அதே போல் துரை வைகோவும் நான் எப்போதும் பத்திரிகையாளர்கள் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக் கூடியவன். ஆனால் இது உள்கட்சி விவகாரம், இதுகுறித்து தற்போது எதையும் சொல்ல முடியாது என்றார்.

இந்த நிலையில்தான் இன்றைய தினம் மதிமுக நிர்வாகக் குழு கூடியது. அப்போது ஒரே மேடையில் மல்லை சத்யா- துரை வைகோ அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தின் தீர்மான அறிக்கையில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ என குறிப்பிடப்பட்டுள்ளதால் அவருடைய ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்கவில்லை என தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக மல்லை சத்யா, வைகோவை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கெனவே துரை வைகோ நேற்று வைகோவை சந்தித்த நிலையில் இருவரிடமும் வைகோ தனித்தனியே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+