"டபுள் ஸ்கோர்" செய்யும் ஸ்டாலின்.. எடப்பாடி பழனிசாமி, சசிக்கு ஏறும் டென்ஷன்.. "என்ன சொல்ல போகிறாய்"
எடப்பாடி பழனிசாமியையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க போகிறதாம்
சென்னை: 2 விதமான பரபரப்பு விசாரணைகள் தமிழகத்தை சூழ்ந்துள்ளன.. திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து, சசிகலா & எடப்பாடி பழனிசாமி என்ற இரு பிம்பங்களுக்கும் சிக்கல்கள் எழுந்துள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் திமுக, தன்னுடை பிரச்சாரத்தில் சொன்ன சாராம்சத்தை மறக்காமல் கையில் எடுத்து வருகிறது.
அறிவித்த அறிவிப்புகளில் பலவற்றில் திமுக நிறைவேற்றிவிட்டது.. இன்னும் சில அறிவிப்புகள் நடைமுறையில் உள்ளன..
அந்த வகையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொணருவோம் என்ற உறுதியை திமுக தந்திருந்தது.. அதன்படியே ஆறுமுகசாமி விசாரணையும் துரிதமாகி விட்டது..

எடப்பாடி பழனிசாமி
மற்றொருபக்கம், ஜெ.மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து கொண்டே இருக்கிறது.. குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விடாமல் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்.. "இப்படி ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதே எடப்பாடி பழனிசாமிதானே.. நடந்தவை எல்லாமே எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்... எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்.. இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திலும் மனு அளித்துள்ளேன்" என்றார்.

ஆறுமுகசாமி ஆணையம்
இப்படிப்பட்ட சூழலில்தான், புகழேந்தியின் மனுவின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து, வரும் 26-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. வந்துள்ளன.. காரணம், ஆணையத்தில் புகழேந்தி தாக்கல் செய்த மனுக்கள் மீதுதான் இப்படி ஒரு முடிவுக்கு ஆணையம் வந்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் அது அவருக்கு மட்டுமல்ல, சசி தரப்புக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி கலக்கம்
மற்றொருபக்கம், சசிகலாவை இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை தந்து வருவதாக சொல்லப்படுகிறது.. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சசிகலாவுக்கு விசாரணையில் பங்கேற்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே விசாரணை நடைபெறுகிறது. இதுதான் எடப்பாடிக்கு டென்ஷனை எகிற வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இத்தனைக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை யாருமே விசாரிக்கவில்லை.. அதற்குள் சசிகலா விசாரிக்கப்படுகிறார்.. இது சசிகலாவுக்கான நெருக்கடியை அதிகப்படுத்துவதாக கருதப்பட்டாலும், பங்களா பற்றின விஷயத்தை நன்கு அறிந்த சசிகலா, விசாரணையில் என்ன சொல்ல போகிறாரோ என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.. கொடநாடு விஷயத்தில், சில மாதங்களுக்கு முன்பேயே எடப்பாடியிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. கோர்ட் வரை விவகாரமும் சென்றது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

என்ன சொல்ல போகிறாய்?
ஒருவேளை இன்றைக்கு சசிகலாவிடம் விசாரணை நடத்தி முடித்தபிறகு, அவர் தரும் பதில்களை தரவுகளை வைத்து, எடப்பாடியிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, சசிகலா விசாரணையில் என்ன சொல்ல போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எடப்பாடிக்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில் எடப்பாடியை விசாரிக்க நேர்ந்தால், அவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு சசிக்கும் ஏற்பட்டுள்ளது.. இரு தரப்பில் இருந்தும் ஒலிக்கிறது, "என்ன சொல்ல போகிறாய்?"
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications