எடப்பாடியை "போட்டு கொடுத்த" சசிகலா?.. அதென்ன "ஹார்டுடிஸ்க்".. செம துணிச்சல்தான்.. கலங்கும் கூடாரம்
எடப்பாடி பழனிசாமி குறித்து அதிகாரிகளிடம் சசிகலா என்ன சொன்னார்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகளும், தலைவலிகளும் சசிகலாவால் கூடிக் கொண்டே போவதாக கூறப்படுகிறது.. எனினும் அனைத்தையும் சமாளிக்கும் முயற்சியல் எடப்பாடி மும்முரமாக இறங்கி உள்ளாராம்..!
ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவில் முக்கிய புள்ளிகளாக வலம் வருபவர்கள் செய்யும் அண்டர் கிரவுண்ட் டீலிங் போன்றவைகள் அனைத்தும், டாக்குமெண்ட்களாக, ஹார்ட் டிஸ்க்குகளாக கொடநாடு பங்களாவில்தான் பாதுகாத்து வந்தனராம்.
அதேபோல, யார் மீது எந்த புகார்கள், பிரச்சனைகள் வருகிறதோ, அப்போது இந்த தகவல்கள்தான் உதவியாகவும் இருந்து வந்துள்ளது.

இளவரசி, சுதாகரன்
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் கொடநாடு பங்களா... சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ள நிலையில், சென்னையில் பேசப்படாத எத்தனையோ அரசியல் விவகாரங்களை இந்த பங்களாவில்தான் பேசுவார்களாம்.. அவை அனைத்துமே சிசிடிவியில் பதிவாகி இருந்தது என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சிடி, டாக்குமெண்ட்கள், ஹார்ட் டிஸ்குக்கள் ஒரே நாளில் காணாமல் போயுள்ளது.. போதாக்குறைக்கு கொலையும் நடந்துள்ளது.

சசிகலா
இவைகள் தொடர்பாகதான், சசிகலாவிடமும் விசாரணை ஆரம்பமானது.. ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் சொன்னாரே, அதுபோலவே, தெரியாது, ஞாபகம் இல்லை என்றே பெருமளவு கேள்விகளுக்கு பதில் சொல்லியதால், அதிகாரிகள் கையை பிசைந்ததாக தெரிகிறது.. எனினும், அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் கூறப்பட்டது.. முதல்நாள் விசாரணையின்போதே, சசிகலா என்ன பதில் சொல்ல போகிறாரோ என்ற கிலியில் எடப்பாடி தரப்பு இருப்பதாக சொல்லப்பட்டது..

எடப்பாடி பழனிசாமி
காரணம், விசாரணையில், சசிகலா அளிக்கும் பதில்களை அடிப்படையாக கொண்டு எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற யூகங்கள் பரபரத்து வரும் நிலையில், இதுவும் டென்ஷனை எகிற வைத்தது.. எல்லாவற்றிற்கும் மேலாக, எடப்பாடி பழனிசாமி பற்றி, ஏதோ வெயிட்டான மெசேஜ் அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்ததாக 2 நாட்களுக்குமுன்பு தகவல்களும் கசிந்தன.

எடப்பாடிக்கு கலக்கம்
இந்நிலையில், மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. சசிகலாவிடம் இரண்டு நாள் விசாரணையை தனிப்படை போலீஸார் முடித்துக் கொண்ட நிலையில், விசாரணையில் தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை அறிய முயற்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, அதிமுக ஆட்சியில் மாநில உளவுத்துறையில் உயரதிகாரியாக இருந்தவரின் உதவியை அவர் நாடியிருக்கிறார்.

பங்களா
மேலும், தனது ஆட்சியின் போது முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அணுகியிருக்கிறார். இரண்டு தரப்பிலுமிருந்து அவருக்கு கிடைத்த தகவல் ஒரே மாதிரி இருந்தது. அதாவது, கொடநாடு சம்பவத்தின் போது ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியில்லாமல் அந்த பங்களாவில் நுழைய யாருக்கும் துணிச்சல் வந்திருக்காது என்று சசிகலா சொல்லியிருப்பதாக அந்த அதிகாரிகள் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்
அதுமட்டுமல்லாமல், இந்த விசாரணையின் இறுதிக் கட்டத்தில் நீங்களும் விசாரிக்கப்படுவீர்கள் ; அதற்கான திட்டமிடலும் போலீசாரிடம் இருக்கிறது. ஆனால், பதட்டமடைகிற அளவுக்கு ஏதுமில்லை என்பதையும் அவர்கள் சொல்லியுள்ளனர். இந்த நிலையில், எடப்பாடியை தொடர்பு கொண்டு சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து சேலம் இளங்கோவன் விசாரிக்க, அதிகாரிகள் தரப்பிலிருந்து தனக்கு கிடைத்த தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இனி என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications