ரூ.1500 வாய் விட்ட எடப்பாடி பழனிசாமி? விஜயிடம் நகரும் விசிக ஓட்டு.. திருமாவின் திமுக முட்டு: பிரபலம்
சென்னை: திமுகவுடன் ஒட்டி உறவாடுவதும், திமுக மீது யாராவது எதிர்தரப்பினர் விமர்சனம் செய்தால், திமுககாரரே அமைதியாக இருந்தாலும், முண்டியடித்துக் கொண்டு முதல் நபராக சென்று திமுகவுக்கு வக்காலத்து வாங்குவதும், முட்டு கொடுப்பதும், காவடி தூக்குவதும் போன்றவைதான், திருமாவளவனின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், விசிகவின் பெரும்பாலான ஓட்டுக்கள், விஜய் பக்கம் நகர்கின்றன" என்று மூத்த பத்திரிகையாளர் மணி, தன்னுடைய கருத்து கூறியிருக்கிறார்.
Label Tamil Nadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "வயது வித்தியாசமில்லாமல் திமுகவிலிருந்து விஜய் பக்கம் நகரும்.. திமுக அரசின் 1000 ரூபாய் உரிமைத்தொகை, இலவச பஸ் பயண திட்டம் இது எதுவுமே விஜய் பக்கம் போவதை தடுக்கவில்லை..

ரூ.1000 உரிமைத்தொகை
1000 ரூபாய் என்ன திமுகவின் பணமா? எங்க பணத்தைதானே எங்களுக்கு தருகிறார்கள் என்கிறார்கள். அதுவும் ஆட்சிக்கு வந்ததும் தராமல் இரண்டரை வருடம் கழித்து தருகிறார்கள்.. அதுவும் எல்லாருக்குமே தராமல், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே தருகிறார்கள்.. எனவே திமுக ஓட்டு உடைந்து விஜய் பக்கம் பெரும்பாலும் தாவக்கூடும் " என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்த அனைவருக்குமே 1000 ரூபாய் தருவோம் என்கிறார் உதயநிதி.. மகாராஷ்டிராவில் இன்று நிலைமை என்ன? கடந்த அக்டோபரில் பதவிக்கு வந்தபோது, 1500 ரூபாயை, 2 ஆயிரம் ரூபாயாக தருவோம் என்றார்கள்..
மகாராஷ்டிரா நிலைமை வரும்
கடந்த பிப்ரவரியுடன் அதை நிறுத்திவிட்டார்கள்.. 5 மாதம் இல்லாமல் இப்போதுதான் மறுபடியும் தர துவங்கி இருக்கிறார்கள்.. பல பேரை அந்த லிஸ்ட்டிலிருந்தும் எடுத்து விட்டார்கள்.. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, எல்லாருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று ஆசை காட்டுவார்கள்..
இதோ இப்போது பொங்கலுக்கு ரூ.5000 தரப்போவதாக சொல்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஒருத்தரை ஏமாற்ற வேண்டுமானால், அவரது ஆசையை வளர்க்கணும்.. இதைத்தான் திமுக செய்கிறது..
எடப்பாடி பழனிசாமி சொன்ன ரூ.1500
எடப்பாடி பழனிசாமியும் திமுகவுக்கு குறைந்தவர் இல்லை.. ஆட்சிக்கு வந்தால் 1500 தருவேன் என்கிறார்.. ஏற்கனவே தமிழக அரசின் கஜானா காலியாக இருக்கு.. 10 லட்சம் கோடிக்கு கடன் உள்ளது.. அரசின் பல துறைகளில் சம்பளம் தருவதற்கே வழியில்லை.
மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம், எல்ஐசியிடம் கையேந்துகிறது மத்திய அரசு.. இதுல 1500 தருவோம் என்று எடப்பாடி பேசுகிறார்.. இவங்க 2 பேருமே மக்களை ஏமாத்துறாங்க.. ஆனால், மக்களிடம் செல்வாக்கு எடப்பாடிக்கு கூடிக்கொண்டே வருகிறது..
திமுகவுக்கு வயித்தெறிச்சல்
இப்படி எடப்பாடிக்கு வரும் கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு வயித்தெறிச்சலை கிளப்புகிறது.. இந்த நேரத்தில் இப்படியான அறிவிப்புகளை எடப்பாடி வெளியிடும்போது, திமுகவும் அறிவிப்புகளை வெளியிடும்..
வரும் தேர்தலில் யார் வெற்றி பெற்று வந்தாலும், மிகப்பெரிய அளவில் விலைவாசி உயரும்.. தற்போது தந்து கொண்டிருக்கும் ரூ.1000 கணிசமாக நிறுத்தப்படும்.. இது சத்தியமான உண்மை.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள் 2 திராவிட கட்சிகளும்..
இப்படியெல்லாம் வாக்குறுதி தரக்கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம், சுப்ரீம்கோர்ட் உத்தரவுகளை இவங்க மதிப்பதே கிடையாது.. வாக்குறுதிகளை அள்ளி விட துவங்கிவிட்டார்கள்.
தலித் இளைஞர்கள் விஜய் பக்கம்
ஆணவ கொலை விஷயத்தில் விஜய் பேசவே இல்லை.. இந்த கோபம் தலித் இளைஞர்களுக்கு இருக்கவே செய்கிறது.. ஆனால், அதைவிட அதிக கோபம் திருமாவளவன் மீது உள்ளது.. திமுக செய்யக்கூடிய எல்லா தோல்விகளுக்கும், பாவங்களுக்கும், தவறுகளுக்கும் திருமாவளவன் துணை போகிறார் என்பதுதான், தலித் இளைஞர்களின் வாக்கு வங்கியில் இருக்கக்கூடிய கோபம்..
தலித் படுகொலை மட்டுமே கிடையாது, தலித்துகளுக்கு தினமும் கொடுமைகள் கிடைக்கின்றன.. இதற்கு கண்டனமும் திருமாவளவன் தெரிவிக்கிறார்.
திருமாவளவன் ஏன் முட்டு கொடுக்கிறார்?
ஆனால், அதையும் மீறி திமுகவுடன் ஒட்டி உறவாடுவதும், திமுக மீது யாராவது விமர்சனம் செய்தால், திமுககாரரே அமைதியாக இருந்தாலும், முண்டியடித்துக் கொண்டு முதல் நபராக சென்று வக்காலத்து வாங்குவதும், முட்டு கொடுப்பதும், காவடி தூக்குவதும், திருமாவளவனின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு..
திமுக அரசில் ஊழல் மலிந்துவிட்டது என்று அதிமுக குறை சொன்னால், உடனே திருமாவளவன் ஓடிச்சென்று திமுகவுக்காக முட்டு கொடுக்கிறார்.. இதென்ன கூட்டணி அரசா?
விஜய் பக்கம் விசிக ஓட்டு
ஏன் இந்த திமுக அரசு ஊழலில் புளுத்து நெளியவில்லையா? மதுரையில் கவுன்சிலர் கணவரை கைது செய்தார்கள்.. 200 கோடி ஊழல் செய்தார் என்கிறார்கள்.. . 5 மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய சொல்லி முதலமைச்சர் உத்தரவு போடுகிறார்.. சிபிசிஐடி விசாரணை நடக்கிறது.. கவுன்சிலர் கணவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளார்கள்.. ஆனால், கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை?
கவுன்சிலரின் ஒத்துழைப்பு இல்லாமல், கவுன்சிலரின் கணவர் இப்படியொரு ஊழலை செய்ய முடியுமா? இதுபோன்ற விஷயங்களில் விசிகவின் செயல்பாடு என்ன? அதனால்தான் விசிக ஓட்டுகள் சிதறி, அது பெரிய அளவில் விஜய்க்கு போய் சேருகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications