ஆஹா.. கடைசியில் ஈபிஎஸ் கேட்டது கிடைக்கலையா? எதுவுமே அங்க செல்லாதாமே? கேசிபி பிடித்த ‘நச்’ பாயிண்ட்!
ஈபிஎஸ் கேட்டது உச்ச நீதிமன்றத்தில் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார் கேசி பழனிச்சாமி.
சென்னை : இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பது குறித்த எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை, எனவே அவர் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றாலும் அவருக்கு சாதகமான முடிவு வராது என பாயிண்டை முன்வைத்துள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அடுத்த கட்ட நகர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை நாடி, பொதுக்குழு முடிவுகளின் படி தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கோரவுள்ளதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் பிளான்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை நாட உள்ளது ஈபிஎஸ் தீர்ப்பு. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் நகலை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பினர் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவே இல்லையே
அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதனை பதிவேற்றம் செய்யும். பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஈபிஎஸ் அணி ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக எந்தவொரு உத்தரவையும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கவில்லை, எனவே, ஈபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கோரினாலும், தேர்தல் ஆணையம் ஏற்காது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் பதவி?
அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி இது தொடர்பாக பேசுகையில், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவில், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார். அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை வேட்பாளருக்கு வழங்க, பொதுக்குழு மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டதே தவிர, இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்பது குறித்த எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.

இப்போது முடிவு வராது
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவிலும், இதுகுறித்த சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எங்களால் முடிவெடுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இன்றளவும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து எடுப்பதுதான் அதிமுக முடிவு. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யார் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றாலும், இப்போது வேறு தேர்தல் எதுவும் வராததால் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தான் இதனை பரிசீலிப்பது பற்றிச் சிந்திப்பார்கள்.

இந்த பதில் தான்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்குச் சென்று முறையிட்டால், நீங்கள் தான் உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் பொதுக்குழு முடிவுகளை வெப்சைட்டில் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள், அதில் எங்கள் பதிலையும் நாங்கள் தெரிவித்து விட்டோம். அதில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இப்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவு, சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி உத்தரவை ஏற்றுக்கொள்வதா, இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதா என்பதை மட்டும்தான் என தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் தரப்புக்கு பதில் கொடுக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications