ஆளுநர் ரவி "யூ டர்ன்".. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திமுக கிரீன் சிக்னல்? ரெடியாக நிற்கும் பாஜக!
சென்னை: அரசியலில் யாரும் எதிரியும் அல்ல.. நண்பனும் அல்ல என்பார்கள்.. அப்படி அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் பாஜகவும், திமுகவும் நெருங்கி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கும் பாஜக.. திமுகவிற்கு Friedn Request கொடுக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக இந்த முறை தீவிரமாக தயாராகி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த சில மாநில கட்சிகளும் ஏற்கும் வகையில் பொது வேட்பாளரை களமிறக்க பாஜக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வருகின்றன.
இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார்

பாஜகவிற்கு ஆதரவு தேவை
இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35% வாக்குகள் விழுந்தன. ஆனால் இந்த முறை பாஜக கூட்டணிக்கு 48.8 சதவிகித வாக்குகளே உள்ளன. எனவே பாஜக நிறுத்தும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க மாநிலங்களில் பலமாக இருக்கும் ஆளும் கட்சிகளின் ஆதரவு தேவை. இதில் முதலில் இருப்பது என்று பார்த்தால்.. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகதான்.

பொதுவேட்பாளர் வெங்கையா நாயுடு
இந்த நிலையில் திமுக ஏற்கும் வகையில் அல்லது டிஆர்எஸ், தெலுங்கு தேசம் போன்ற மாநில ஆளும் கட்சிகள் ஏற்கும் வகையில் வேட்பாளர் ஒருவரை பாஜக நிறுத்த வேண்டும். இதற்கு தோதானவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுதான் என்று கூறப்படுகிறது. திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இந்த நிலையில்தான் இவரை நிறுத்தினால் திமுக போன்ற கட்சிகளின் ஆதரவை பெறலாம் என்று பாஜக கணக்கு போடுகிறதாம்.

சமீபத்தில் சந்திப்பு
சமீபத்தில் கூட வெங்கையா நாயுடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் கண்டிப்பாக இந்த சந்திப்பிற்கு பின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் ரேஸில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்தான் அவரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மூன்றாவது பெரிய கட்சியான திமுகவின் ஆதரவை பெறும் வகையில் அவர் சந்திப்பை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேற்றே செய்தி
அதே சமயம் திமுகவும் அவ்வளவு எளிதாக பாஜக வேட்பாளரை ஆதரித்துவிடாது. வெங்கையா நாயுடுவை ஆதரிக்க வேண்டும் என்றால் திமுகவிற்கு சாதகமான முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதன்படி ஆளுநர் ரவியை திரும்ப பெறுதல், நீட் விலக்கு மசோதாவை ஏற்றுக்கொண்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தல், 7 பேர் விடுதலையில் ஆளுநர் சாதகமான முடிவு எடுத்தல் போன்ற கோரிக்கைகளை பாஜக தரப்பிற்கு ஆளும் திமுக வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது பற்றி நேற்றே நாம் விளக்கமாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
Recommended Video

சமாதானம்
இந்த நிலையில்தான் தற்போது ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். இத்தனை நாள் பொறுமை காத்துவிட்டு தற்போது சரியாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக ஆளுநர் ரவி மசோதாவை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார். ஆளுநரின் இந்த மூவ் ஆளும் திமுக தரப்பிற்கு கொடுக்கப்பட்ட வெள்ளை கொடியோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட்டில் உங்களுக்கு சாதகமான முடிவு எடுத்துள்ளோம்.. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எங்களுக்கு சாதகமாக முடிவை நீங்கள் எடுங்கள் என்று பாஜக இப்போதே தூது விடுவது போல தோன்றி உள்ளது.

வெள்ளை கொடி
திமுகவின் ஆதரவை வேண்டி, பாஜக ரெடியாகி நிற்கும் நிலையில், திமுக இதை ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இப்போது மசோதா குடியரசுத் தலைவருக்கு போய்விட்டது. இனி திமுகவை ஆதரிக்கும் (எதிர்க்கட்சிகள் கொண்டு வரும்) குடையரசுத் தலைவர் தேர்வானால் அவரே மசோதாவை நிறைவேற்றிவிடுவார். பாஜகவின் தயவை திமுகவை நம்பி இருக்க வேண்டியது இல்லை என்பதால், திமுக பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு தருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications