மிஸ்ஸாகுமோ நிதிஷ்குமாருக்கு சான்ஸ்? ஐக்கிய ஜனதா தளம் உருவானதெப்படி? வெற்றி, தோல்வி தேர்தல் என்னென்ன
பாட்னா: மொத்தம் 67%க்கும் மேற்பட்ட வாக்காளர் பங்கேற்றிருந்த இந்த தேர்தல் பீகாரின் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தனர். ஐக்கிய ஜனதா தளம் இம்முறையும் ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் எகிறி வருகிறது. அந்தவகையில் ஐக்கிய ஜனதா தளம் உருவான விதம், கடந்து வந்த தேர்தல்களை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில், 1977ல் உருவானதுதான் ஜனதா கட்சி..

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தன.. இதில், காங்கிரஸில் இருந்து பிரிந்த தலைவர்களும் அடக்கமாகும்.. இப்படி உருவானதுதான் ஜனதா கட்சி..
முதல் காங்கிரஸ் தோல்வி
கட்சி ஆரம்பித்த 1977ம் ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலைச் ஜனதா கட்சி சந்தித்தது.. அதில் வெற்றியும் பெற்று ஆட்சியும் அமைத்தது... அப்போதுதான் முதன்முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது..
எனினம், ஜனதா கட்சியில் பதவிப்போட்டிகள் வெடித்தன.. ஜனதா கட்சியின் ஆட்சியில் முதல் பிரதமரான மொரார்ஜி தேசாய், அடுத்து பிரதமான சரண் சிங், கட்சிக்குள் நிலவும் பூசல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள்.. இதனால் 1980 தேர்தலில் ஜனதா கட்சியிலிருந்து பல்வேறு தலைவர்கள் பிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கி போட்டியிடும் நிலைமைக்கு வந்தார்கள்.
விபி சிங்க
காங்கிரஸை எதிர்த்து வெளியேறிய வி.பி. சிங் தலைமையில், ஜனதா தளம் என்ற புதிய பெயரில் ஒன்றிணைந்தன. ஆனால், ரத யாத்திரை நடத்திய அத்வானியை கைது செய்த விவகாரத்தில் வி.பி.சிங் அரசுக்குத் தான் அளித்துவந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இது விபி சிங் அரசு கவிழ காரணமாகியிற்று, அத்துடன் ஜனதா தளமும் இரண்டாக உடைந்தது..
அப்போது ஜனதா தளத்திலிருந்து மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United) என்ற 2 கட்சிகள் உருவாகின.... இதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது.
அம்பு சின்னம்
ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பு சின்னம் இருந்து வருகிறது. கடந்த 2004 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அக்கட்சி 9924209 வாக்குகளைப் (2.6%, 8 இடங்கள்) பெற்றிருந்தது.
1989 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை (National Front) ஆட்சிக்கு கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு ஜனதா தளத்துக்கு உண்டு.. ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழக்கவும் நேரிட்டது,.
ஐக்கிய ஜனதா தளம்
இதற்கு பிறகு ஜனதா தளம் பல பிரிவுகளாகப் பிரிந்த பிறகு, 2019 பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 16 இடங்களில் வெற்றி பெற்றது. அதிலும், பீகார் போன்ற மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது.
கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் பெற்ற வாக்குகள் 6,558,538 ஆகும்.. அதேபோல 2009 தேர்தலில் 5,936,786 வாக்குகளும், 2014-ல் 5,662,444 வாக்குகளும், 2019?ல் 8,902,719 வாக்குகளும் ஜேடியு பெற்றுள்ளது.
இதில் சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், கடந்த 1995-ல் 167 சீட்டுகளில் ஐக்கிய ஜனதா தளம் பெற்றி பெற்றது.. அதேபோல் 2000ம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று 21 சீட்டுகளையும், 2010ல் 2015-ல் 71 சீட்டுக்களையும், 2020-ல் 43 சீட்டுகளையும் ஜனதா தளம் பெற்றது..
கடந்த 2015 சட்டமன்றத் தேர்தல், JD(U) பாஜகவுடனான கூட்டணியை முறித்து, RJD, காங்கிரஸுடன் சேர்ந்து மகாகத்பந்தனை உருவாக்கியிருந்தது..
2020 சட்டமன்ற தேர்தல்
கடந்த 2020 பீகார் சட்டமன்ற தேர்தலை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்தம் 115 இடங்களில் போட்டியிட்ட ஜனதா தளம், 15.39 சதவீத வாக்குகள் அதாவது 43 சீட்டுகளில் வெற்றி பெற்றிருந்தது.. அந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜக 74 சீட்டுகளில் வெற்றி பெறவும், இரு கட்சிகளும் சேர்ந்து 125 சீட்டுகளில் வென்று ஆட்சியை அமைத்தன.
2010ல் 115 இடங்களைப் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் கடந்த தேர்தலில் வெறும் 43 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. 2020 சட்டமன்ற தேர்தலில்தான், ஜனதா தளம் குறைவான சீட்டுகளை பெற்றிருந்தது.
நிதிஷ்குமார்
ஆனால், நிதிஷ்குமாரை பொறுத்தவரை, பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் என கட்சி கூட்டணி ஆண்டாலும், முதலமைச்சராகவே பதவியில் நீடித்து வருகிறார்.. 1977, 1980, 1985, 1995 ஆகிய 4 தேர்தல்களில் பீகார் சட்டப்பேரவைக்கு போட்டியிட்ட நிதிஷ் குமார், 1985ல் மட்டுமே வெற்றி பெற்றார். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை கூட சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல், சட்டமேலவை உறுப்பினராக மட்டுமே இருந்து முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.
அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஒருமுறைகூட தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை என்றாலும், 7% குர்மி, கோரி சமூகங்கள், 26% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று 33% வாக்குகளை நிதிஷ்குமார் தன்னிடத்திலே தக்கவைத்து வருகிறார்.
இன்று பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், "நிதீஷ் குமார் ஜி விரும்பும் வரை முதலமைச்சராகத் தொடர்வார்" என்று தெரிவித்துள்ளார். ஆனால், 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பாரா என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications