கொத்து கொத்தாக போக போறாங்க.. எடப்பாடியும் சேர்த்துக்க மாட்டாரு.. கட்சி மாறுவாரா ஓபிஎஸ்? எந்த கட்சி?
ஓ பன்னீர்செல்வத்திற்கு தொட்டதெல்லாம் தோல்வி என்று அடுத்தடுத்து சரிவை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஏற்பட்ட தோல்வி ஓ பன்னீர்செல்வத்தை அடித்து வீழ்த்தி இருக்கிறது. இந்த தோல்வி காரணமாக ஓ பன்னீர்செல்வம் பெரும் மன வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் கட்சி மாறும் வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அவர் கட்சி மாறுவாரா? அப்படியே மாறினாலும் எந்த கட்சிக்கு செல்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் நேற்று இந்த தீர்ப்பை வழங்கினார்.

தோல்வி 1
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தோல்வி 2
அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டு இருக்கிறார். இது ஓ பன்னீர்செல்வத்தின் அரசியலில் மிகப்பெரிய தோல்வி. அவரின் அடுத்த தோல்வி என்று பார்த்தால் ஈரோடு கிழக்கு சட்டசபை சமயத்திலேயே அவர் சின்னத்தை இழந்தார். அதை கையெழுத்து போடும் அதிகாரம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு சென்றது. இது ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளர் செந்திலை வாபஸ் வாங்க சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தோல்வி 3
அதோடு ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் அவருடைய அணியில் இருந்து வெளியேறினார். கொத்து கொத்தாக நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு எடப்பாடி அணியில் அவர் இணைந்தார். இதுவும் ஓ பன்னீர்செல்வத்திற்கு தோல்வியாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மேலும் நிர்வாகிகள் அணி மாற வாய்ப்புகள் உள்ளன. தோல்வி 4 என்று பார்த்தால் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என்று அண்ணாமலை சமீபத்தில் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார். இன்னொரு பக்கம் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் என்று வெறுமனே ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு முன் மூத்த தலைவர் என்றோ, ஒருங்கிணைப்பாளர் என்றோ, முன்னாள் முதல்வர் என்றோ, எதிர்க்கட்சி துணை தலைவர் என்றோ குறிப்பிடவில்லை. இதனால் எங்கே எடப்பாடியை பாஜக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடியின் ஒற்றை தலைமை பாஜக அங்கீகரிக்கும் விதமாக இப்படி குறிப்பிட்டு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக
இப்படி தோல்வி மேல் தோல்வி அடைந்த ஓ பன்னீர்செல்வம் எங்கே அரசியல் ரீதியாக அஸ்தமனம் ஆகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் அதிமுக வந்தால் அவரை சேர்த்துக்கொள்ள மாட்டோம். வேண்டும் என்றால் அவருடன் இருக்கும் ஒரு சிலரை சேர்த்துக்கொள்வோம் என்று நேற்று எடப்பாடி பழனிசாமி சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய போவதாக பல்வேறு செய்திகள் வந்தன. ஆனால் ஓ பன்னீர்செல்வம் இப்போதைக்கு பாஜகவில் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் கட்சி மாறும் வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அவர் கட்சி மாறுவாரா? அப்படியே மாறினாலும் எந்த கட்சிக்கு செல்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

என்ன சொன்னார்கள்
அவர்கள் அளித்த பதிலில் ஓ பன்னீர்செல்வம் இப்போதைக்கு கட்சி மாற மாட்டார். அவர் அம்மாவின் அரசியல் வாரிசு. இதில் இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணைய முடிவே இறுதியானது. அவர்கள் முடிவு எடுக்கட்டும். அதன்பின் பார்க்கலாம். இன்னும் சிவில் வழக்கு எல்லாம் இருக்கிறது. அதெல்லாம் நடக்கட்டும். கண்டிப்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சூழ்நிலை மாறும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications