கசியும் சீக்ரெட்.. எடப்பாடிக்கு எதிராக உருவாகும் "மூவர்" அணி.. கிளைமேக்ஸை நெருங்கும் ஓபிஎஸ் டீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டு இருக்கும் தலைவர்கள் விரைவில் முக்கியமான மீட்டிங் ஒன்றை போட போவதாகவும், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அதிமுகவை எடப்பாடி கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவிற்கு எதிராக இருக்கும் வழக்கில் மட்டும் சாதகமாக தீர்ப்பு வந்தால், எடப்பாடி அதிமுகவில் அசைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

 அதிமுக

அதிமுக

இந்த நிலையில்தான் அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டு இருக்கும் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக செயல்பட போவதாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு முடிந்ததில் இருந்தே, அக்கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். முதலில் ஓ பன்னீர்செல்வம், பின்னர் வைத்தியலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதன்பின் ஜெசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

நீக்கம்

நீக்கம்

அதோடு எம்பி ஓ பி ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இது போக தேனி மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியின் விதிகளுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இருக்க கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டு இருக்கிறது.

 நடவடிக்கை

நடவடிக்கை

இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் எம்பி ஓ பி ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருத கூடாது என்று எடப்பாடி பழனிசாமி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் ஓபிஆர் நீக்கத்திற்கு சசிகலா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியின் ஒரே ஒரு லோக்சபா எம்பியை கட்சியில் இருந்து நீக்கியது தவறு? சுயலாபத்திற்காக இப்படி செய்கிறார்கள்.

 ஓம் பிர்லா

ஓம் பிர்லா

கட்சியின் நலனை பார்க்கவில்லை. இது நல்ல விஷயம் கிடையாது. தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவது எப்படி நியாயம் ஆகும்? தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று சசிகலா விமர்சனம் செய்து இருந்தார். சசிகலா முதல்முறை இப்படி வெளிப்படையாக ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து உள்ளார்.

 சசிகலா

சசிகலா

இதற்கு முன்பெல்லாம், சசிகலா ஓ பன்னீர்செல்வத்தின் பெயரை சொல்லாமல் மறைமுகமாக ஆதரிப்பார். ஆனால் இந்த முறை ஓ பி ரவீந்திரநாத்திற்காக வெளிப்படையாக சசிகலா ஆதரவை தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு நேரடியாக நடக்க வாய்ப்பு இல்லை. மறைமுகமாக நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

மீட்டிங்

மீட்டிங்

அதோடு சசிகலா - ஓபிஎஸ் - டிடிவி தினகரன் என்று அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட மூன்று பெரிய தலைகள் இணைந்து ஒரு குழுவை உருவாக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இவர்களுக்கு கீழ் நிறைய நிர்வாகிகள் உள்ளனர். பல தொண்டர்கள் இவர்களின் ஆதரவு குழுவில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் 3 முக்கிய தலைவர்களும் இணைந்து குழு ஒன்றை உருவாக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

 நிர்வாகிகள் இணைவார்கள்

நிர்வாகிகள் இணைவார்கள்

அதாவது கட்சி போல அல்லாமல்.. ஒரு அமைப்பு போல குழுவாக இவர்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் டீல் இறுதியாகலாம் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

 ஏன் இப்படி

ஏன் இப்படி

ஆனால் இவர்கள கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை. அமமுக அப்படியே இருக்கும். ஆனால் சசிகலா - ஓபிஎஸ் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை. அதிமுகவை கைப்பற்றுவதே இவர்களின் இறுதி நோக்கம். அதனால் ஒரு குழுவாக, அமைப்பாக இவர்கள் செயல்படுவார்கள். விரைவில் இவர்களின் ரகசிய சந்திப்புகள் நடக்கலாம் . முன்பே நடக்க வேண்டிய சந்திப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+