இது மட்டும் நடந்தால் அவ்வளவுதான்! மோடிக்கு உள்ளே இருந்தே வரும் சிக்கல்! தாமரையில் வெடித்த பூகம்பம்?
சென்னை: 220 - 240 இடங்கள் மட்டுமே பாஜக வெல்லும் வாய்ப்பு உள்ளது. மோடிக்கு வரப்போகும் பிரச்சனை வெளியே இருந்து வராது. உள்ளே இருந்து வரும். மூன்றாவது முறை மோடி வந்தால் அது ஆர்எஸ்எஸ் தோல்வி ஆகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நாடு மூன்று தசாப்தங்களாக.. அதாவது 30 வருடங்கள் மோசமான ஆட்சியை எதிர்கொண்டது. வலிமையான நபர் பிரதமராக இல்லை. இந்தியா ஸ்திரமின்மைக்கு விலை கொடுத்தது, ஸ்திரமற்ற அரசாங்கங்கள் மூன்று தசாப்தங்களாக இயங்கின.

இந்தியா கூட்டணி அப்படி இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நிலைமை மோசமாகும். அவர்களிடம் பிரதமர் முகம் இல்லை. இதனால் கூட்டணியை காக்க ஒரு வருடம் ஒரு பிரதமர் திட்டத்தை கையில் எடுப்பார்கள். சரத் பவார் ஒரு வருடத்திற்கு (பிரதமர்) தேர்ந்தெடுக்கப்படுவார், மம்தா ஜி ஒரு வருடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், ஸ்டாலின் ஒரு வருடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், மற்றவர்கள் விட்டுவிட்டால் ராகுல் ஜி தேர்ந்தெடுக்கப்படுவார். .நாடு நடத்துவது இப்படி இல்லை. வலிமையான தலைவர் வேண்டும், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
பேட்டி: அமித் ஷாவின் இந்த பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இந்தியா கூட்டணி வெற்றிபெற்று விட்டால் என்று மோடி, அமித் ஷா பேச தொடங்கிவிட்டனர். அவர்கள் வார்த்தைகளில் இருந்தே அவர்களின் தோல்வி பயம் தெரிகிறது. தோல்வி பயம் அவர்களின் பிடரியை பிடித்து ஆட்ட தொடங்கிவிட்டது. முதலில் 400 இடங்களில் வெல்வோம் என்று கூறினர். அதன்பின் ஆப் கி பார் மோடி சர்க்கார் என்று கூறினர். அதன்பின் அது பாஜக ஆட்சி என்று மாறியது. அதன்பின் அது என்டிஏ ஆட்சி என்று மாறியது.
அப்படி அவர்கள் இறங்கி வர தொடங்கி உள்ளனர். இப்போது இந்தியா கூட்டணி வெற்றிபெற்று விட்டால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என்று பேசும் அளவிற்கு வந்துவிட்டனர். அமித் ஷா வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வர காரணம் தோல்வி பயம். தோல்வி பயம் நிச்சயம் வந்துவிட்டது. அதனால் இப்படி பேசுகிறார்கள். யாரும் நிரந்தரம் இல்லை. ரொம்ப உயரமாக இருந்தவர்கள் கீழே விழுந்தால் கடுமையான அடி விழும்.
தோல்வி பயம்: அவர்கள் மேலே சென்றுவிட்டார்கள்.. அவர்கள் கண்டிப்பாக சறுக்குவார்கள் . இனி அவர்கள் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். 2019ல் 303 இடங்களில் வென்ற போது பாஜகவிற்கு ஆணவம் ஏற்பட்டது. இப்போதுதான் இது வேறு மாதிரியான பால் கேம் என்பது பாஜகவிற்கு தெரிகிறது. அவர்கள் ஜெயிப்பது முக்கியம் இல்லை. எப்படி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம். 280க்கு கீழ் சென்றால் அவ்வளவுதான். கட்சிக்கு உள்ளேயே அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும்.
மோடி இப்போது அதிகாரம் உள்ளவர். அவரிடம் அதிகாரம் இல்லை என்றால் கட்சிக்கு உள்ளேயே அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும். அவரை கடுமையாக எதிர்ப்பார்கள். அவரின் பலமே அவருக்கு கடுமையான பலவீனமாக ஆகும். மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. வெளியே இருந்து கூட்டணி வைத்தால் மோடிக்கு அது சிக்கல் ஆகும். அதிகாரம் இல்லாத வாஜ்பாயை , அத்வானியை மதித்த பாஜக அதிகாரம் இல்லாத மோடியை கூட்டணி கட்சிகள் மதிக்காது.
மெஜாரிட்டி சிக்கல்: ஆர்எஸ்எஸ் இவரை கட்டுக்குள் வைக்க நினைக்கிறது. 220 - 240 இடங்கள் மட்டுமே பாஜக வெல்லும் வாய்ப்பு உள்ளது. மோடிக்கு வரப்போகும் பிரச்சனை வெளியே இருந்து வராது. உள்ளே இருந்து வரும். மூன்றாவது முறை மோடி வந்தால் அது ஆர்எஸ்எஸ் தோல்வி ஆகும். ஆர்எஸ்எஸ் வளராமல் போகும். அதனால் மோடிக்கு பிரஷர் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து வரும். ஆர்எஸ்எஸ் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்ப்பு மோடிக்கு வரும்.
பாஜக வென்றால் கூட மெஜாரிட்டி வராது. இதனால்தான் இப்போது இந்தியா கூட்டணி வெற்றிபெற்று விட்டால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என்று பேசும் அளவிற்கு வந்துவிட்டனர். அமித் ஷா வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வர காரணம் தோல்வி பயம். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று பாஜகவிற்கு உள்ளேயே தெரிய தொடங்கிவிட்டது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications