"75 எம்எல்ஏக்கள்".. அதிமுக + மோடி.. எடப்பாடி வீட்டு வாசலில் மாஜி ஒரே போடு.. டக்குனு திரும்பிய ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் ஆதரவு தந்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: "எங்கள் கட்சியின் உட்பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி தலையீடு அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெளிவுபடுத்தி உள்ளார்.
யார் கையில் அதிமுக செல்வது என்ற பிரச்சனை கிளம்பி உள்ளது.. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு அளித்து வருகின்றனர்.. இந்த விஷயம் தெரிந்து, ஓபிஎஸ் கலக்க நிலையில் உள்ளதாகவும், அதனாலேயே எடப்பாடியின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் தெரிகிறது.
எனவே, ஓபிஎஸ்ஸையும், எடப்பாடி பழனிசாமியையும் அவரவர் ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மாஜி அமைச்சர்
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமியை இன்றைய தினம் அவரது வீட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஓ.எஸ். மணியன்.. இதில் செய்தியாளர்கள் எத்தனையோ கேள்விகளை கேட்டனர்.. ஆனால், சிலவற்றிற்கு அவர் பதில் சொல்லவில்லை.. சில கேள்விகளை பத்திரிகையாளர்களிடமே திருப்பி கேட்டார் மணியன்.. குறிப்பாக, ஒற்றை தலைமை விவகாரத்தில், உங்களுடைய ஆதரவு யாருக்கு என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

எடப்பாடி வீடு
அதற்கு மணியன், "என்னுடைய ஆதரவு யாருக்கு? மற்றவர்கள் ஆதரவு யாருக்கு? என்றெல்லாம் நீங்கள் கேட்க கூடாது.. காரணம் என்னன்னா, இது உட்கட்சி பிரச்சனை.. இந்த பிரச்சனையை கழகத்தின் சட்டவிதிகளுக்கேற்றபடி, கழகத்தின் கட்சி அலுவலகத்திலேதான் பேச முடியும்.. மற்றபடி கழக பிரச்சனை விவாதிக்ககூடிய இடம் இது அல்ல என்பது என் கருத்து" என்றார்.. அதாவது யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக மணியன் சொல்லவில்லை.

ஓஎஸ் மணியன்
அதேபோல, ஒற்றை தலைமை பற்றி தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு மணியன், அதுதான் உங்களுக்கே தெரியுமே என்று பதிலளித்தார்.. அதிமுக பிளவுபட வாய்ப்பு இருக்கா? இல்லயா? என்று கேட்கப்பட்டது.. அதற்கு மணியன், "ஒற்றை தலைமைக்கு ஆதரவு மிகப்பெரும்பான்மையாக இருக்கிறது.. அதை பலரும் ஏற்றுக் கொள்வார்கள்.. அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்... அது காலத்தின் கட்டாயம்... ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

மணியன் பேட்டி
சசிகலா குறித்து ஓபிஎஸ் சொன்னதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு அவர், "இந்த விஷயத்தை நீங்களே அவரிடம் கேளுங்கள்" என்றார்.. பிறகு, துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி பிரதமர் மோடி அழுத்தம் தந்ததாக ஓபிஎஸ் சொல்லி உள்ளாரே என்று கேட்கப்பட்டது.. அதற்கு ஓஎஸ் மணியன், அது ஓபிஎஸ்ஸின் கருத்து.. அவருடைய விருப்பம்" என்றார்.. அதிமுக பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்ற நிலை உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. "எங்கள் கட்சியின் உட்பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி தலையீடு அவசியம் இல்லை என்றார் ஓ.எஸ்.மணியன்.

பிரதமர் மோடி
எடப்பாடி பழனிசாமியை நீங்கள் ஆதரிக்க காரணம் என்ன என்று அடுத்த கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு ஓஎஸ் மணியன், "இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்கிறேன்.. 4 வருடம் ஆட்சியை சிறப்பாக நடத்தி, அதிலும் நெருக்கடியான ஆட்சியை நடத்தி, பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்று, இன்று கூட்டணி ஒத்துழைப்புடன 75 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றிருக்க ஒரு தலைவரை, நீங்கள் இப்படி கேட்டிருக்க கூடாது" என்றார் ஓ.எஸ்.மணியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications