மோடி போட்ட "பிக் பிளான்".. இதெல்லாம் அவ்வளவு சாதாரணம் இல்லை! இந்த முறை தேர்தலில் நடக்க போறதே வேறயாமே
சென்னை: லோக்சபா தேர்தலில் மோடி இஸ்லாமியர்களை பற்றி மோசமாக பேசுகிறார்.. மோடி இதை எல்லாம் சாதாரணமாக பேசவில்லை., மோடி திட்டமிட்டு பேசுகிறார். அவர் பேசுவது கடுமையாக திட்டமிட்டு மேற்கொள்ளும் பேச்சுக்கள். என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் கடந்த 2 வாரமாக இஸ்லாமியர்களை தாக்கி மோடி பேச தொடங்கி உள்ளார். ஊடுருவல்காரர்கள் என்பது தொடங்கி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது வரை பல விஷயங்களை சுட்டிக்காட்டி மோடி பேசி வருகிறார். இந்த நிலையில் மோடியின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் பலவீனம்: அதில், எதிர்கட்சிகளிடம் பிரதமர் வேட்பாளர் இல்லாதது பலவீனம்தான். 2004, 1977ல் பிரதமர் வேட்பாளர் சொல்லப்படவில்லை. 1982ல் கூட பிரதமர் வேட்பாளர் சொல்லப்படவில்லை. மொரார்ஜி தேசாய் , விபி சிங், மன்மோகன் சிங் இப்படித்தான் பிரதமர் ஆனார்கள். இந்த முறை அப்படித்தான் நடக்கும். மாற்றம் வேண்டும் என்றால் யாரை வைத்து வேண்டும் என்றாலும் மாற்றுவார்கள். காற்றை வைத்து கூட மாற்றுவார்கள்.
10 ஆண்டுகள் ஆண்டுவிட்டார்கள். ஆட்சிக்கு எதிரான கடுமையான மனநிலை இருக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழாமல் கூட இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் மெஜாரிட்டி இருக்காது. இப்போது அவர்களிடம் இருக்கும் மெஜாரிட்டி உடையும். எல்லா அமைப்புகளையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். கடுமையான பவரை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அந்த பவர் கண்டிப்பாக அவர்களுக்கு இருக்காது.
மெஜாரிட்டி கொஞ்சம் குறைந்தால் கூட அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் ஆகும். மோடியால் பவரை ஷேர் செய்ய முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது மோடியின் மிகப்பெரிய தோல்வியாக மாறும். மோடி இதனால்தான் இஸ்லாமியர்கள் பற்றி பேசுகிறார்கள். போகிற இடங்களில் எல்லாம் இஸ்லாமியர்களை பற்றி பேசுகிறார். மத ரீதியாக கடுமையான கருத்துக்களை வைக்கிறார் .
மெஜாரிட்டி: அவரால் 370 பற்றி பேச முடியவில்லை. ராமர் கோவில் பற்றி கூட பேச முடியவில்லை. 10 ஆண்டு ஆட்சியின் வெற்றி பற்றி கூட பேச முடியவில்லை. மோடி இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் சொத்துக்களை காங்கிரஸ் கொடுக்கும் என்று கூறினார். இந்துக்களின் சொத்துக்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்துக்களின் தாலியை கூட எடுத்துக்கொள்வார்கள். இந்துக்களின் தங்கத்தை தேடி அவர்கள் வருகிறார்கள். விட மாட்டார்கள், என்று மோடி கூறினார். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அப்படி எந்த அறிவிப்பும் இல்லை என்று மோடி மத ரீதியாக பேச தொடங்கி உள்ளார்.
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஜூன் 4ம் தேதி யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும். ஆனால் இந்த தேர்தலில் மோடியின் வீழ்ச்சி மிக மோசமாக இருக்கும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த தேர்தல் பேசப்படும். ஒரு பிரதமர் எவ்வளவு தரம் தாழ்ந்து செல்ல முடியும் என்பதை அவர் காட்டி உள்ளார் . அவர் வெறுப்பை விதைக்கிறார். தேர்தலுக்கு முன்பே கூட இதனால் எதாவது மோசமான சம்பவம் நடந்தால் நிலைமை மோசமாகும்.
நாட்டின் பிரதமரே அதை செய்கிறார். இந்த தேர்தல் இந்தியா வெட்கித்தலைகுனிய வேண்டிய தேர்தல். இதன் பலன்கள் மிக மோசமாக கூட மாறும் . தலித் மக்களை கூட இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பி விட மோடி பார்க்கிறார். மோடி இதை எல்லாம் சாதாரணமாக பேசவில்லை., மோடி திட்டமிட்டு பேசுகிறார். அவர் பேசுவது இல்லை கடுமையாக திட்டமிட்டு மேற்கொள்ளும் பேச்சுக்கள். போகிற போக்கில் அவர் பேசவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications