"நீட் சட்டம் பாஜக ஆட்சியில் வந்தது என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாரா?" செல்வப்பெருந்தகை சவால்!
சென்னை: "நீட் தேர்வை காங்கிரஸ் சட்டமாக்கவில்லை, பாஜகதான் சட்டமாக கொண்டுவந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது என நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன். பாஜக ஆட்சியில்தான் என்று நிரூபித்தால் நீங்கள் (பாஜக) ராஜினாமா செய்ய தயாரா?" என சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் கலந்து கொண்டு முதல் ஆளாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.

உதாரணமாக, பொங்கல் பண்டிகை போனஸ் உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பண்டிகை முன்பணம் உயர்வு, பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு முன்பணம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கலந்து கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, நீட் தேர்வு குறித்து பாஜகவுக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வை காங்கிரஸ் சட்டமாக்கவில்லை, பாஜகதான் சட்டமாக கொண்டுவந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன். ஆனால், அதைப்போலவே பாஜக ஆட்சியில்தான் என்று நிரூபித்தால் பாஜக ராஜினாமா செய்ய தயாரா?" என சவால் விடும் வகையில் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications