இப்படி ஒரு பிரச்சனையா? ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. இரண்டரை ஆண்டுகள் கழித்து தொடருமா?
சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த திட்டம் இரண்டரை ஆண்டுகள் கழித்து தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது? ஏன் அந்த இரண்டரை ஆண்டுகள்? விரிவாக பார்ப்போம்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என அறிவித்தது.

இதற்கான விண்ணப்ப முகாம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. ஆகஸ்டு 4 ஆம் தேதி நிறைவடைந்தது முதல் கட்ட முகாமில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. 2 ஆம் கட்ட முகாம் கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் தொடங்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை 2 ஆம் கட்ட முகாம் நிறைவடைந்தது. மொத்தம்
ஒன்றரை கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. 2 ஆம் கட்ட முகாமிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
ஆகஸ்டு 18 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு முகாம் 20 ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 முகாம்களில் வருகை தர இயலாத குடும்பத் தலைவிகள் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியான பெண்கள், விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பித்து வருகிறார்கள்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது.
ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இதை பெற முடியாது.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள். உரிமைத் தொகை கோர முடியாது. சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.
விதவை ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் உரிமைத் தொகையை பெற முடியாது. ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால் ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்யலாம். இதை பெறலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும். என்று அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், திமுக ஆட்சிகாலம் இரண்டரை ஆண்டுகாலத்தில் நிறைவடைந்து 2026 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்காவிட்டால், இந்த திட்டம் தொடருமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்தது. இதற்கு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்து உள்ளார்.
அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் திட்டம் இது. இதனால் பிற திட்டங்களை தொடர்வது தாமதமாகலாம். ஆனால், கட்டாயமாக தமிழ்நாடு அரசால் இத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியும். மகாராஷ்டிராவுக்கு அடுத்து பெரிய பொருளாதாரம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இன்னும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இது தொடரும். தமிழ்நாட்டின் வரலாறு அவ்வாறாகவே இருந்துள்ளது.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம், இன்னும் தொடர்கிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா பெயரில் இன்றும் தொடர்கிறது." என்றார். இதேபோல், ஜெயலலிதா அரசு கொண்டு வந்த இலவச சைக்கிள், அம்மா உணவக திட்டங்களை திமுக அரசும் தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோல் இந்த திட்டமும் தொடரும் என்று நம்பலாம்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி












Click it and Unblock the Notifications