"கோர்த்து விடாதீங்க".. மாஜி வளர்மதி என்ன இப்படி சொல்கிறாரே.. அப்ப சசிகலா விவகாரம் கன்பார்ம்டு?
மாஜி அமைச்சர் வளர்மதி சசிகலா இணைப்பு பற்றி பேட்டி தந்துள்ளார்
சென்னை: சசிகலாவை கட்சிக்குள் இணைத்து கொள்வதா? வேண்டாமா? என்ற முடிவுக்கு அதிமுக மேலிடம் இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை என்றே தெரிகிறது.. இது தொடர்பான பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சசிகலா விஷயத்துக்கு மாஜி அமைச்சர் வளர்மதி பதிலளித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற பரபரப்பு நேற்று காலையில் இருந்தே அரசியல் களத்தில் தொற்றி கொண்டது..
காரணம், சமீபத்தில் தேனியில் நடந்த அதிமுக கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மறுபடியும் கட்சியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர்த்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அது ஓபிஎஸ்ஸிடமும் வலியுறுத்தப்பட்டது.

ஓ.ராஜா
இதையடுத்து, ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.. இந்த 2 விஷயங்களும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஓ.ராஜாவை கட்சியில் இருந்து வேறு வழியின்றி நீக்கம் தொடர்பான அறிவிப்பில், ஓபிஎஸ் கையெழுத்து போட்டார்.. ஆனாலும், சசிகலா குறித்த அவரது உண்மை நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. எனவே, நேற்றைய தினம், சென்னை தலைமை அலுவலகத்தில், மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சசிகலா விஷயத்திற்கு ஒரு முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்பு
மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதாலும், மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், நிச்சயம் சசிகலா விவகாரம்கலந்து பேசப்படும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், வெறும் மகளிர் தினம் மட்டுமே எம்ஜிஆர் மாளிகையில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது... கேக் வெட்டி ஒருவருக்கொருவர் தலைவர்கள் ஊட்டி விட்டுக் கொண்டனர்..

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி வளர்மதிக்கு கேக் ஊட்டிவிட, ஓபிஎஸ் கோகுல இந்திராவுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பிறகு இவர்களும் கேக் எடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு ஊட்டிவிட்டனர்.. தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.. இந்த மகளிர் தின கோலாகல கொண்டாட்டத்தின் முடிவில், அதிமுகவின் மகளிர் அணி மாநில செயலாளர் பா.வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் சொன்னதாவது:

சிறப்பான கொண்டாட்டம்
ஜெயலலிதா காலம் முதல் மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடுகிறோம்... மகளிரணியினர் மாவட்ட ஒன்றிய அளவிலும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மகளிரணி அதிகம் உள்ள கட்சி அதிமுகதான். கட்சிக்காக சிறைச்சாலை சென்று முதல்குரல் கொடுத்தது மகளிரணிதான்... அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி இயல்புதான் , தோல்வி வெற்றிக்கான வழிகாட்டி. தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலும் தோல்வியை சந்தித்துள்ளோம்.
Recommended Video

ஊடகங்கள்
அதிமுகவில் 2 பெரிய இருபெரும் தலைவர்கள் இருக்கின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம் என்றார்.. அப்போது செய்தியாளர்கள், சசிகலாவின் இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு வளர்மதி, "ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்துவிடாதீர்கள்.. இதுபோன்ற விஷயங்களில் லிங்க் செய்துடாதீங்க.. தலைமையின் முடிவுக்கு எப்போதும் நாங்கள் கட்டுப்படுவோம்.. அவ்வளவுதான்" என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications