"முதல்வர் வேட்பாளர்" செங்கோட்டையன்.. எடப்பாடியை அதிர வைக்கும் முக்குலத்தோர்? இது லிஸ்டுலேயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி ஒன்று ஓ பன்னீர்செல்வத்துடன் சேர வேண்டும். அல்லது வேறு முதல்வர் வேட்பாளர்களை கொண்டு வர வேண்டும். தனி தனியாக எல்லோரும் நின்றாள் கண்டிப்பாக வாக்குகள் பிரியும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

 Will Sengottaiyan replace Edappadi Palanisamy as face of AIADMK in coming elections?

அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.

கட்சியின் தோல்விக்கு இரட்டை தலைமையும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். இந்த நிலையில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், சசிகலாவையும், தினகரனையும் தூக்கிய போது முக்குலத்தோர் முகமான ஓ பன்னீர்செல்வம் இருந்தார். ஓ பன்னீர்செல்வத்தை வைத்து சசிகலாவையும், தினகரனையும் சமாளித்தார் எடப்பாடி. அதனால் முக்குலத்தோர் இவர்களை எதிர்க்கவில்லை. இப்போது பன்னீர்செல்வமும் உடன் இல்லை. அவர் இல்லாததால் முக்குலத்தோர் இப்போது எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளனர். பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தலில் வெல்ல முடியாது.

அவர் மோசமான நிலைக்கு சென்றுள்ளார். உதயகுமார் , செல்லூர் ராஜு மூலம் லோக்சபா தேர்தலில் வெல்ல முடியாது. சட்ட மன்ற தேர்தலில் வெல்லலாம். ஆனால் இவர்கள் சொன்னதை கேட்டு லோக்சபா தேர்தலில் முக்குலத்தோர் வாக்களிக்க மாட்டார்கள். உதயகுமார் , செல்லூர் ராஜு ஆகியோர் லோக்கல் லீடர்ஸ். சட்டசபை தேர்தலில் இவரக்ள் பயன் அளிக்கலாம். இவர்கள் சொல்வதை அப்போது முக்காலத்தோர் கொஞ்சம் கேட்கலாம். ஆனாலும் 2024 முடிந்த பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

வாக்குகள் பிரியும்: 2024 லோக்சபா தேர்தல் முடிந்த பின் அதிமுக எப்படி இருக்கிறது.. கட்சியில் நிலைமை எப்படி உள்ளது.. எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி உள்ளதா? அல்லது செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா? வேறு யாரிடமாவது கட்சி செல்கிறதா என்று பாக்கலாம். எதிர்பக்கம் திமுக வாக்கு வங்கி உடையாது. அவர்களின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும். திமுக கூட்டணி உடையாது. அப்படி இருக்க எடப்பாடி பழனிசாமி எண்ணம் செய்வார்? எப்படி அதிமுக வாக்குகளை பெற வைப்பார்.

 Will Sengottaiyan replace Edappadi Palanisamy as face of AIADMK in coming elections?

எடப்பாடி ஒன்று ஓ பன்னீர்செல்வத்துடன் சேர வேண்டும். அல்லது வேறு முதல்வர் வேட்பாளர்களை கொண்டு வர வேண்டும். தனி தனியாக எல்லோரும் நின்றாள் கண்டிப்பாக வாக்குகள் பிரியும். 2024ல் இவர்கள் பிரிந்து நிற்பார்கள். அதன் மூலம் பாடம் கற்பார்கள். அவர்கள் பாடம் கற்று அதன்பின் 2026 லோக்சபா தேர்தலில் இவர்கள் சேர வாய்ப்பு உள்ளது. முக்குலத்தோர் எல்லாம் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.

என்ன நடக்கும்?: ஆனால் இதற்கு முன் முக்குலத்தோர் தொகுதியிலேயே வாக்குகளை இழந்தவர்கள் அதிமுகவினர். அதோடு 3ம் இடத்திற்கு கூட அவர்கள் சென்றுள்ளனர். அப்படி இருக்க முக்குலத்தோர் எல்லாம் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்காதீர்கள். முக்குலத்தோர் வாக்குகள் இல்லாமல் அதிமுக வெற்றிபெறுவது தென் மண்டலத்தில் கஷ்டம்தான். ஜெயலலிதா இருந்த போது முக்குலத்தோர் வாக்குகளை மொத்தமாக அள்ளினார். கருணாநிதி அங்கே கைவிட்டுவிட்டார். ஆனால் ஸ்டாலின் அதை பிடித்துக்கொண்டார்.

முக்குலத்தோர் வாக்குகள் மூலம்தான் மூர்த்தி தொடங்கி பிடிஆர் வரை வென்றனர். அப்படி இருக்க முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லும்.. முக்குலத்தோர் எல்லாம் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்காதீர்கள். சசிகலாவையும், தினகரனையும் தூக்கிய போது முக்குலத்தோர் முகமான ஓ பன்னீர்செல்வம் இருந்தார். ஓ பன்னீர்செல்வத்தை வைத்து சசிகலாவையும், தினகரனையும் சமாளித்தார் எடப்பாடி. அதனால் முக்குலத்தோர் இவர்களை எதிர்க்கவில்லை. இப்போது பன்னீர்செல்வமும் உடன் இல்லை.

 Will Sengottaiyan replace Edappadi Palanisamy as face of AIADMK in coming elections?

அதனால் எடப்பாடிக்கு எதிராக வாக்குகள் கண்டிப்பாக செல்லும். முக்குலத்தோர் எடப்பாடியை மொத்தமாக புறக்கணிப்பார்கள். வாக்குகள் எடப்பாடிக்கு செல்லாது என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+