சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பார்த்துட்டே இருங்க.. ஒரு சீட் கூட பாஜக ஜெயிக்காது".. அடித்து கூறிய அதிமுகவினர்.. பரபர சர்வே!

பாஜக கூட்டணியால் அதிமுக சறுக்கலை சந்திக்கும் என நக்கீரன் சர்வே கூறுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பாஜகவை கூட்டணியில் இணைத்து கொண்டுள்ளது எந்த விதத்தில் சாதக - பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற பரவலான கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை.. அந்த கட்சிக்கென்று குறிப்பிட்ட வாக்கு வங்கியும் இல்லை.. சட்டப்பேரவையில் உறுப்பினர்களும் இல்லை.. நோட்டா என்றாலே பாஜக என்ற பெயரில்தான் தமிழக மக்களிடம் பதிந்து போய் உள்ளது.

இப்படி இருந்தும் அதிமுக அரசுடன் கூட்டணி வைத்துள்ளது.. எனவே இதன் தாக்கம் தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

முத்தலாக்

முத்தலாக்

கடந்த முறை எம்பி தேர்தலின்போது முத்தலாக் விஷயம் உச்சக்கட்டத்தில் இருந்ததால், பாஜக ஆதரவு இல்லாமல், பாஜக கட்சியினர் யாருமே இல்லாமல் வேலூர் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது அதிமுக.. ஜஸ்ட் பாஸ் ஆனது.. இதற்கு காரணம், பாஜக மீதான அதிருப்திதான்.. அதனால்தான் தொகுதிக்குள் ஒரு பாஜக தலைவரையும் வரவழைக்காமல் பிரச்சாரம் செய்தது.

 விலைஉயர்வு

விலைஉயர்வு

இப்போதும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான்.. பாஜக அரசின் இந்தி திணிப்புகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என பல வகைகளில் மக்களின் அதிருப்திகளை எளிதாக சம்பாதித்து வருகிறது.. செல்லும் இடமெல்லாம் அதிமுக தன்னுடைய சாதனைகளையும், திமுக மீதான விமர்சனத்தையும் முன்வைத்து ஓட்டு கேட்டு கொண்டிருக்கிறது.. ஆனால் பாஜக மீதான மக்களின் கோபங்களுக்கும், அதிருப்திகளுக்கும் விடை தர முடியாத நிலையில் உள்ளது.

 20 சீட்

20 சீட்

இது தேர்தலில் எப்படி எதிரொலிக்கும், பாஜகவுடனான கூட்டணி அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்று நக்கீரன் ஒரு சர்வேயை எடுத்தது.. அந்த சர்வேயில் 63 சதவீத மக்கள் திரண்டு வந்து, அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்கும் என்று ஓபனாகவே சொல்லி உள்ளனர்.. அதேபோல, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியிருப்பது அதிகம் என 57 சதவிகிதம் பேரும் அந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் என 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 பொதுமக்கள்

பொதுமக்கள்

அதற்கு பொதுமக்கள் சொல்லும் பெரும்பாலான காரணம், "விவசாய சட்டம் போல எண்ணற்ற சட்டங்களை போட்டு மக்களை வறுத்து எடுத்து வருகிறது பாஜக.. நீட் தேர்வு, பெட்ரோல் விலைவாசிக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது.. இதை பற்றி கவலைப்படாமல், பாஜக சனாதன கொள்கையை முன்னெடுத்து, இங்கு இந்தியை திணித்துவருகிறது. பாஜகவின் இந்த முயற்சிகளுக்கு எல்லாம் அதிமுக இசைந்து வருகிறது..

மிரட்டல்

மிரட்டல்

இதே அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா என பல கட்சிகள் இருந்தாலும், பாஜக மட்டும் மிரட்டி கொண்டிருக்கிறது.. பாஜக நிர்வாகிகள் மிரட்டல் தோரணையில்தான் அதிமுகவினரிடமே பேசுகிறார்கள்.. தங்கள் கையில் ஆட்சி இருக்கிறது என அதிமுக நிர்வாகிகளை மிரட்டி காரியம் சாதிக்கிறார்கள். அதுபோலத்தான் முதல்வரையும் மிரட்டி, கூட்டணி அமைத்துக்கொண்டு சீட்டுகளையும் கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள்... ஒரு சீட்கூட பாஜக ஜெயிக்காது.." என்கின்றனர் அந்த நக்கீரன் சர்வேயில் பொதுமக்கள்.

அதிருப்தி

அதிருப்தி

இந்த எதிர்ப்பலைகளும், அதிருப்திகளும் அதிமுக தரப்பில் கவனிக்காமல் இல்லை.. இதற்கு மாற்றாக என்ன மாதிரியான பிரச்சார யுக்தியை அதிமுக கையில் எடுக்க போகிறதோ? எப்படி இந்த எதிர்ப்புகளை சமாளித்து திமுகவை வென்று காட்ட போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Will the ADMK benefit from the BJP alliance, Nakkheeran Survey Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X