சூரியன் உதித்ததும் சந்திரயான் 3 மீண்டும் உயிர்த்தெழுமா? திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் விளக்கம்
சென்னை: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்த நிலையில், 14 நாட்கள் செயல்பாடுகளுக்கு பின்னர் ரோவர் உறக்க நிலைக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த ரோவர் மீண்டும் உயிர்த்தெழுமா? என்கிற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திரயான்3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேல் பதிலளித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் உலகத்தையும் தாண்டி சாமானிய மக்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
நிலவு குறித்த ஆய்வுக்கு முதலில் வித்திட்டது சந்திரயான் 1 திட்டம்தான். இந்த திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றியுள்ளார். ரூ.386 கோடியில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மகத்தான வெற்றி பெற்றது. அதாவது கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நிலவை நோக்கி ஏவப்பட்டது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய இந்த சந்திரயான் 1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டுபிடித்து சொன்னது.
அதன் தொடர்ச்சியாகதான் சந்திரயான் 2, சந்திரயான் 3 ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் சந்திரயான் 3 திட்டத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் எனும் விஞ்ஞானிதான் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், சந்திரனில் 14 நாட்கள் வேலையை முடித்துவிட்டு உறக்கத்தில் இருக்கும் ரோவர் மீண்டும் உயிர்த்தெழுமா? என்பதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "நிலவில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை தரையிறக்கியதற்காக கடுமையான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். தொடர் முயற்சிகளின் வெற்றிதான் இது. ஒன்றிரண்டு அல்லாமல் எங்கள் பரிசோதனைகளை தொடராக மேற்கொண்டோம். ஒவ்வொரு தோல்வியின்போதும் அதிலிருந்து பிரச்னைகளை புரிந்துக்கொள்ள குழு உருவாக்கப்பட்டு அந்த குழு எங்களுக்கு தகவல்களை கொடுத்தது. எனவே அடுத்த முறை தோல்வி ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் கடைசி 90 நிமிடங்கள் நாங்கள் எந்த உத்தரவையும் கொடுக்க முடியாது. அதாவது திட்டமிட்டபடி ஏதேனும் நடக்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவு கொடுக்கலாம். மற்றபடி அனைத்தும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படியாக திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த 3 விஷயங்களும் வெற்றியடைந்துள்ளன. தற்போது அடுத்த நிலவு நாள் அதாவது செப்டம்பர் மாதம் 22ம் தேதி மீண்டும் நிலவில் சூரியன் உதிக்கும்.

அப்போது சந்திரயான் 3 பிரக்ரயான் ரோவர் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் என்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிலவில் இரவு நேரங்களில் மைனஸ் 175 டிகிரி செல்ஸியல் குளிர் இருக்கும். எனவே அந்த குளிரில் ரோவரின் பொருட்கள் மீண்டும் செயல்படுமா என்பது சந்தேகம்தான். நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இது கொதிநிலையை விட அதிகம். இருப்பினும் இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், குளிரிருந்து ரோவரை காக்க நாம் எதையும் செய்யவில்லை. எனவே வரும் 22ம் தேதி சூரியன் உதிக்கும் போது மீண்டும் ரோவர் செயல்படும் என்பது நம்பிக்கை. அதற்கான புரோகிராம்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அன்றுதான் அது செயல்படுமா? என்பது குறித்து தெரிய வரும்" என்று கூறியுள்ளார். ஒருவேளை இப்படி ரோவர் மீண்டும் செயல்பட்டால் அது மீண்டும் ஒரு உலக சாதனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications