ரொம்ப தீவிரம்.. திமுகவை விரட்டி வரும் அண்ணாமலை.. சிக்கிய விக்னேஷ் மரணம்.. முதல்வருக்கு போட்ட ட்வீட்
விக்னேஷ் மரணத்திற்கு நியாயம் கேட்டுள்ளார் பாஜக அண்ணாமலை
சென்னை: போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷ், மரணத்தில் நியாயம் வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து அனைத்து காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர்.

சுரேஷ்
அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது... ஆனால், அவர்களிடம் கத்தி, கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது.. இதையடுத்து திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்ற 28 வயது இளைஞரையும், பட்டினபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 28 வயது இளைஞரையும், போலீசார் விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணை
அவர்களை இரவுநேரத்தில் விசாரணை நடத்தி உள்ளனர்.. இந்நிலையில் விக்னேஷ்க்கு காலையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. உடனடியாக அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்... ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்துவிட்டார்..

வலிப்பு நோய்
இதனால் உறவினர்கள் கொந்தளித்து விட்டனர்.. விசாரணை என்கிற பெயரில் விக்னேஷை அடித்துக் கொன்று விட்டார்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் திடீரென வலிப்பு வந்துவிட்டதால்தான், விக்னேஷ் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, விக்னேஷின் மர்ம மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.. எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ், நேரில் சென்று விசாரணை நடத்தினார்..

போஸ்ட் மார்ட்டம்
விக்னேஷ் சடலத்தையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார்... விக்னேஷின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது... அதுவும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.. இதையடுத்து விக்னேஷ் உடல் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் உடலை அடக்கம் செய்ய காவல்துறையினரே கொண்டு செல்வதாக, அவரது குடும்பத்தினர் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளனர்.. இப்படி அடுக்கடுக்காக போலீசார் மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில்தான், பாஜகவின் அண்ணாமலை இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து ட்விட் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.. அதில், "சென்னையில் காவல்துறை விசாரணையின்போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவருடைய உடலையும் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். தமிழக முதல்வர் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா?" என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

பாஜக
திமுகவின் ஒவ்வொரு செயலையும் பாஜக உன்னிப்பாக கவனித்து வருவதும், அதிலும் அண்ணாமலை, திமுகவுக்கு எதிரான எந்த விஷயத்தையுமே விட்டு வைப்பதில்லை என்பதும் தெரியவருகிறது.. அதேசமயம், உயிரிழந்த விக்னேஷ் மரணம் குறித்த உண்மைதன்மையை திமுக அரசு வெளிக்கொணர வேண்டும் என்பதே மக்களின் பரவலான கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications