கருணாநிதிக்கு வந்த அதே பிரஷர்.. அலெக்ஸ்சாண்டர் ஸ்டைலில் ரவியை களமிறக்கிய பாஜக.. ஸ்டாலினுக்கு சவாலா?
சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவியின் நியமனம் காரணமாக பலதரப்பட்ட அரசியல் கேள்விகள், விவாதங்கள் நடக்க தொடங்கி உள்ளன. ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தரப்பட்ட பிரஷர் போலவே இப்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்திய அரசு ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Recommended Video
ஆளுநர் ஆர்என் ரவியின் நியமனம் குறித்து பார்க்கும் முன் பழைய ஆளுநர் அலெக்ஸ்சாண்டரின் கதையை சுருக்கமாக பார்த்து விடலாம். 1996 முதல் 1998 வரை தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் பி. சி. அலெக்சாண்டர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது பி. சி. அலெக்சாண்டர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆர்என் ரவி முன்னாள் ஐபிஎஸ் என்றால் பி. சி. அலெக்சாண்டர் முன்னாள் ஐஏஎஸ். இப்போது இருப்பது போல திமுக அப்போது காங்கிரசோடு கூட்டணியில் இல்லை.
1987 எம்ஜிஆர் மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று கட்சி இரண்டாக உடைந்தது. சட்டசபையிலும் இதனால் பெரும்பான்மை நிரூபிக்க பெரிய மோதல் ஏற்பட்டது . இதனால் நடந்த தொடர் அரசியல் சம்பவங்களை அடுத்து தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்து ஆண்டவர்தான் பி. சி. அலெக்சாண்டர்.

பி. சி. அலெக்சாண்டர்
அப்போது அதிமுகவில் நிலவிய மோதல் காரணமாக கண்டிப்பாக அக்கட்சி பெரும்பான்மை பெறாது என்ற அரசியல் வல்லுநர்கள் கணித்தனர். எம்ஜிஆர் இல்லாத நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு அமரும் பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது. அப்போது திமுகவிற்கு சவாலாக இருந்தது அதிமுக கிடையாது. ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர்தான். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் இந்திய ஆட்சி அதிகாரங்களை கரைத்து குடித்தவர். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிக மிக நெருக்கமானவர்.

நெருக்கம்
அப்போது ஆளுநர் ஆட்சி என்றாலும், கிட்டத்தட்ட வலுவான முதல்வர் போல பி. சி. அலெக்சாண்டர் செயல்பட்டார். ஆளுநர் ஆட்சியை பயன்படுத்தி தனி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் எப்படியாவது திமுக, அதிமுகவை ஓரம்கட்டிவிட்டு ஆட்சியை பிடிக்க முயன்றது. திமுக, காங்கிரஸ் உறவு பிளவுபட்டு இருந்த சமயம் அது. பி. சி. அலெக்சாண்டர்தான் திமுகவின் பிரச்சாரத்திற்கும், கருணாநிதிக்கும் சவாலாக இருந்தார். முன்னாள் ஆட்சி பணியாளரான பி. சி. அலெக்சாண்டரின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அதன்மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வைக்கும் திட்டத்தில் ராஜீவ் காந்தி இருந்தார்,

ராஜீவ் காந்தி
இதனால் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ராஜீவ் காந்தி மிக தீவிரமாக கவனம் செலுத்தினார். பல முறை தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுகவின் 2 அணிகளை வீழ்த்தி திமுக மாபெரும் வெற்றிபெற்று 150 இடங்களோடு ஆட்சியை பிடித்தது. அப்போது பி. சி. அலெக்சாண்டர் கருணாநிதிக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனம் போல பார்க்கப்பட்டார். அப்போது ஒரு எக்ஸ் ஐஏஎஸ் அதிகாரி எப்படி கருணாநிதிக்கு சவாலாக இருந்தாரோ அதே போன்று பி. சி. அலெக்சாண்டர் ஸ்டைலில் தற்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்என் ரவியை களமிறக்கி உள்ளது பாஜக.

சிபிஐ
போலீஸ், சிபிஐ, புலானய்வு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் என்று பல பிரிவுகளில் முக்கிய பொறுப்புகள், அசாம் ஆளுநர் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி அதிகம் கவனிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்என் ரவிவை தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்தது அலெக்சாண்டர் நியமனத்திற்கு இணையான மூவாக பார்க்கப்படுகிறது. ராஜீவ் காந்திக்கு எப்படி ஒரு அலெக்சாண்டர் இருந்தாரோ பிரதமர் மோடிக்கு ஆர்என் ரவி அப்படி இருப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

விவாதங்கள்
முக்கியமாக தமிழ்நாடு அரசியலில் தற்போது மாநில சுயாட்சி கொள்கைகள் உச்சத்தில் உள்ளது. ஒன்றிய வார்த்தை பிரயோகம், நீட் எதிர்ப்பு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்கள், சுயாட்சி முழக்கங்கள், அதிமுகவிற்கு எதிராக நீளும் வழக்குகள், அவ்வப்போது எழும் சில திராவிட நாட்டு கோரிக்கைகள் என்று மிக முக்கியமான கட்டத்தில் ஆர்என் ரவியை பாஜக தமிழ்நாடு ஆளுநராக களமிறக்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலினுடன் முந்தைய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் நினைத்ததை விட இணக்கமாகவே பழகினார்.

பழக்கம்
தமிழர் ஆளுநர் புரோஹித் பெரிய அளவில் திமுகவிற்கு சவாலாக இல்லாத நிலையில்தான் தற்போது ஆர்என் ரவி களமிறக்கப்பட்டு இருக்கிறார். திமுகவின் ஆட்சிக்கு சவாலாக இவர் இருப்பார் என்று இப்போது அரசியல் வல்லுநர்கள் பேச தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் தரப்பும் இந்த ஆளுநர் நியமனத்தை எதிர்த்து உள்ள நிலையில், திமுக தரப்பு அதிகாரபூர்வ வரவேற்பு மட்டுமே கொடுத்துள்ளது. ஸ்டாலினுக்கு இவர் எவ்வளவு சவாலாக இருப்பார்.. அலெக்ஸ்சாண்டர் பாணியில் திமுகவிற்கு குடைச்சல் கொடுப்பாரா என்று போக போகத்தான் தெரியும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications