"குருவிக்கூடு" கலையுதா.. திமுக தடுமாறுமா? ஆட்டத்தை கலக்கும் எடப்பாடி பழனிசாமி.. அங்கே "ரூட் கிளியர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் என்றதுமே, திமுக கூட்டணி குறித்த சலசலப்புகளும், யூகங்களும், வெடித்து கிளம்பி உள்ளன.. இதுதான் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததுமே, ஓடோடிவந்து வாழ்த்தை சொல்லி வரவேற்றது விசிகவின் திருமாவளவன்தான்..

Will VCK, CPM parties alliance with AIADMK and Are there problems in the DMK alliance

பாஜக கூட்டணியை அதிமுக முறித்து கொண்டிருப்பது வரவேற்கதக்கதாகும். அதிமுக தனித்து போட்டியிட்டால் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும். அதே வேளையில் பாஜகவுடன் அதிமுக இணைந்து பயணித்தால் அதன் வங்கி குறைந்துவிடும்'' என்று மீண்டும் கூறியிருந்தார் திருமாவளவன்.

ஜெயக்குமார் பகீர்: ஒருமுறை ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டார்கள்.. "கர்நாடகாவில் பாஜக தோல்வியால் அதன் கூட்டணியில் உள்ள அதிமுக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் சொல்லியுள்ளாரே என்று கேட்டதற்கு, "திமுக கூட்டணியில் நீடிக்க, திருமாவளவனுக்கு விருப்பமில்லை" என்று போகிறபோக்கில் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போயிருந்தார் ஜெயக்குமார்.

நேற்று முன்தினமும் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் திருமாவின் கருத்து குறித்து கேட்டார்கள்.. அதற்கு ஜெயக்குமார், அரசியலில் மாற்றங்கள் இயல்பு, தேர்தல் வரும்போது கூட்டணியில் மாற்றம் வரும். திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வெளியேறும் என்று இன்னொரு பஞ்ச் வைத்துவிட்டு போனார்.

திருமாவளவன்: திருமாவளவன் எப்போதெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுகிறாரோ அப்போதெல்லாம், கூட்டணி குறித்த சந்தேகம் எழுவது இயல்பாகிவிட்டது.. திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக திருமாவளவன் பலமுறை சொல்லிவிட்டாலும்கூட, அதிமுகவில் இணையும்போது, கூடுதல் சீட் பெற முடியும் என்று விசிக கணக்கு போட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

இதுபோலவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது.. கடந்த முறையே அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் முயன்றதாக ஒரு பேச்சு இருந்தது..

இண்டியா கூட்டணி: தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகும்கூட, ஆளும் தரப்பை எதிர்த்து கண்டன அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை விசிக போலவே சிபிஎம் கட்சியும் முன்னெடுத்து வருகிறது. கூட்டணி தலைமையிடம் குறைகள் இருந்தாலும் அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியும் வருகின்றன.

அதனால், இந்த முறை, பாஜக இல்லாத அதிமுகவுடன் இணைய, கம்யூனிஸ்ட்கள் தயங்காது என்கிறார்கள்.. கூடுதல் சீட் பெறுவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்றும் கணக்கு போட வாய்ப்புள்ளதாம். போதாக்குறைக்கு, இண்டியா கூட்டணியிலும் உரசல்வந்துவிட்டது.. மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கல் இருக்கிறது.. அதனால்தான், அந்த மாநிலங்களில், இண்டியா' கூட்டணி கிடையாது என அறிவித்திருக்கிறது.

கூட்டணி விரிசல்: ஆக, திமுக கூட்டணியில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலோ அல்லது கேட்ட இடம் கிடைக்காமல் போனாலோ, கூட்டணியில் விரிசல் வர நிறையவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் கட்சிகள் போன்றவை இது தொடர்பான ஆலோசனையையும் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை, விசிக அதிமுக பக்கம் சென்றால், திமுக கூட்டணியில் பாமக ரூட் கிளியர் ஆகவும் வாய்ப்புள்ளது. அரசியலில் எதுவும் மாறலாம் என்பதால், எதையுமே இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+