அதிமுகவில் இணைகிறாரா தமாகா யுவராஜா? திடீர் ராஜினாமாவுக்கு பின்னணி என்ன? அவரே கொடுத்த விளக்கம்!
சென்னை: தமாகா இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள யுவராஜா, அதிமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பை யுவராஜா ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், இந்த கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் எந்தப் பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமாகா தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக, பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசி இருந்தனர். தமாகா தலைவர்கள் பலரும் அதிமுகவுடன் கூட்டணி செல்வதையே விரும்பியதாக கூறப்பட்டது.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்த நிலையில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் அந்த சந்திப்பு குறித்து யுவராஜா விளக்கம் அளித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் த.மா.கா கட்சி அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம், அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.கவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்தார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்தேன் என விளக்கம் அளித்திருந்தார் யுவராஜா.
தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில் நீண்ட காலம் தான் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார் யுவராஜா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் யுவராஜா.
அதில், எதிர்வரும் காலங்களில் கட்சியின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன் என்றும் தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜா, ராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய இளைஞரணி தலைவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக 117 புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கட்சி கட்டமைப்பை பலப்படுத்த ஜி.கே.வாசன் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நீண்டகாலம் வகித்து வந்த தமாகா இளைஞரணி பதவியை யுவராஜா ராஜினாமா செய்திருந்தாலும், கட்சியில் உறுப்பினராகவே தொடர்கிறார். எனினும், சிறிது காலத்தில் அவர் அதிமுகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் உலவி வருகின்றன.
இதுதொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ள யுவராஜா, இளைஞரணி தலைவர் பதவியைத்தான் ராஜினாமா செய்துள்ளேனே தவிர, கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை துறக்கவில்லை. நீண்ட காலம் இளைஞரணி தலைவராக இருந்துவிட்ட காரணத்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே பயணிப்பேன் எனக் கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். யுவராஜா, ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். காங்கிரஸ் சார்பில் 2011 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பதவியை திடீரென ராஜினாமா செய்தார் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா! ஜிகே வாசன் அதிர்ச்சி!
ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கிய நிலையில், யுவராஜாவும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற நிலையிலும் யுவராஜா தமாகாவிலேயே தொடர்ந்து பயணித்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா , 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்தார். ஆனாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமாகாவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications