திமுக பிரமுகர் கொலை: கட்டாய உறவுக்கு அழைத்தார்.. தலையை வெட்டி குடலை உருவினேன்.. கள்ளக்காதலி பகீர்
சென்னை: திமுக பிரமுகரின் தலையை அடையாற்றில் 3 நாட்களாக தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. திமுக பிரமுகர் சக்கரபாணியை கொன்றது ஏன் என அவருடைய கள்ளக்காதலி என கூறப்படும் பெண் உள்பட மூன்று பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த மணலி செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுகவில் திருவொற்றியூர் 7ஆவது வார்டு பகுதி பிரதிநிதியாக இருந்தார்.
இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார். கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற சக்கரபாணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து தனது தந்தையை காணவில்லை என சக்கரபாணியின் மகன் நாகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மணலி உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

சக்கரபாணி
இந்த நிலையில் சக்கரபாணியின் செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலங்கிய தனிப்படை போலீஸார், ராயபுரம் கிரேஸ் கார்டன் 3ஆவது தெருவில் உள்ள தமீம்பானு (40) என்பவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் குளியல் அறையிலிருந்த சாக்குமூட்டையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சக்கரபாணியின் உடல் கிடைத்தது.

கொலை
விசாரணையில் தமீம்பானுவும் தனது தம்பி வாசிம் பாஷாவும் (35) சேர்ந்து சக்கரபாணியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராயபுரம் போலீஸார் சக்கரபாணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தமீன்பானு, அவருடைய தம்பி வாசிம் பாஷா ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவு
மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் டில்லி பாபு (29) தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர். சக்கரபாணியை கொலை செய்தது எப்படி என்பது குறித்து போலீஸாரிடம் தமீம்பானு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணலியில் உள்ள சக்கரபாணியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.

திநகரில் வேலை
எனது கணவர் அஸ்லாம் உஜைனி. சென்னை திநகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டுக்கு வருவார். எனக்கு 14, 12 வயதுகளில் இரு மகள்கள் உள்ளனர். சக்கரபாணி எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உதவினார். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

3 ஆண்டுகள்
அதன் பிறகு சக்கரபாணிக்கு தெரியாமல் 3 ஆண்டுகளாக ராயபுரம் கிரேஸ் கார்டன் 3ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 3ஆவது மாடியில் குடியேறினேன். இதை தெரிந்து கொண்ட சக்கரபாணி, என் கணவர் இல்லாத நேரத்தில் கடனை கேட்டு வருவது போல் என் வீட்டுக்கு வருவார். அப்போது என்னுடன் உல்லாசமாக இருப்பார். தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை.

உல்லாசம்
எனக்கும் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபுவுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் எனது கணவரும் சக்கரபாணியும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருப்போம். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு சக்கரபாணி குடிபோதையில் எனது வீட்டுக்கு வந்தார். நான் , எனது 2 மகள்களும் வீட்டில் இருக்கிறார்கள். எனவே வீட்டுக்குள் வரவேண்டாம் என்றேன்.

ஆத்திரம்
ஆனால் அதையும் மீறி வீட்டுக்குள் வந்த அவர், வலுக்கட்டாயமாக என்னை கட்டிப்பிடித்து உறவுக்கு வரும்படி அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரிடம் சண்டை போட்டேன். அப்போது சப்தம் கேட்டு கீழ் வீட்டிலிருந்து வந்த எனது தம்பி வாசிம் பாஷா எங்கள் வீட்டிற்கு வந்தான். சக்கரபாணியை இனி உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என கருதி அவரை கீழே தள்ளி நானும் எனது தம்பியும் அரிவாள்மனை மற்றும் கத்தியால் வெட்டினோம்.

பிளாஸ்டிக் கவர்
பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையை துண்டித்து தலையையும் அவரது குடலையும் உருவி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டினோம். பின்னர் அதை டில்லிபாபுவும் வாசிம் பாஷாவும் ஆட்டோவில் கொண்டு சென்று குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பைபர் படகுகள் நிற்கும் பகுதியில் போட்டனர். பின்னர் தலையை அடையாறு மலர் மருத்துவமனை அருகே கல்லை கட்டி ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினர்.

10 துண்டுகளாக உடல்கள்
பொழுது விடிந்ததும் பெரிய கத்தியை வாங்கி வந்து சக்கரபாணியின் உடலை 10 துண்டுகளாக வெட்டி, தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கு மூட்டையில் கட்டி குளியலறையில் வைத்தோம். துர்நாற்றம் வீசாமல் இருக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்களை தெளித்தோம். இந்த நிலையில் சக்கரபாணியை போலீஸார் தேடுவது தெரியவந்தது, ஆள்நடமாட்டம் இருந்ததால் சக்கரபாணியின் உடலை அப்புறப்படுத்த முடியாமல் வீட்டு பாத்ரூமிலேயே வைத்திருந்தோம். இரவு எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என இருந்த நிலையில் போலீஸார் கண்டுபிடித்து விட்டனர் என தமீம்பானு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கூவம் ஆற்றில் தேடல்
தலையை வீசி எறிந்த அடையாற்று பகுதியில் வாசிம் பாஷாவை அழைத்து சென்று ராயபுரம் போலீஸார் அடையாளம் காட்டப்பட்டு தீயணைப்பு மற்றும் மெரினா மீட்பு படை வீரர்களுடன் தலையை தேடும் பணி நடைபெறுகிறது. ஆனால் 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தலையை அடையாறு கூவம் ஆற்றில் வீசிவிட்டதாக வாசிம் பாஷா தெரிவித்ததை அடுத்து அங்கும் தலையை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்!












Click it and Unblock the Notifications