"கள்ளக்காதல்".. ஒரு வருஷமாச்சு.. நடிகை ராதா தந்தா மட்டும் உடனேவா.. அனல் வீடியோ போட்ட பானு ரேகா!
தன் புகாரை விசாரிக்குமாறு கமிஷனருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்
சென்னை: என் கணவனின் கள்ளக்காதல் பற்றி போலீசில் நான் புகார் தந்து ஒரு வருஷமாகுது.. ஆனால், நடிகை ராதா புகார் தந்தால் மட்டும் உடனே நடவடிக்கை எடுக்கறீங்க? நடிகைக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா" என்று பாதிக்கப்பட்ட பானுரேகா என்ற பெண் வீடியோ போட்டு கமிஷனருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் பானுரேகா... இவர் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் பிரபாகரன் என்பவரை 1994-ல் திருமணம் செய்துள்ளார்.
ஆனால் பிரபாகரன் பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தனக்கு துரோகம் செய்ததாகவும், மேலும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாகவும் கடந்த வருடம், பிப்ரவரி மாதம் போலீஸ் கமிஷனர் ஆபீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.

பிரபாகரன்
பிரபாகரன் பலமுறை வாய்ப்பு தந்தும், திருந்தவே இல்லை.. வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். பிரபாகரனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புகார் தந்தேன்.. அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பானுரேகா
ஆனால் அந்த புகாரின் படி இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பானுரேகா, திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ஆதங்கத்துடன் அவர் பேசி இருப்பதாவது: நான் கமிஷனர் முதல் இன்ஸ்பெக்டர் வரை புகார் அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சென்னை நகர காவல்துறை பிரபாகரனுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.

புகார்
தன்னை 2வது திருமணம் செய்து அடித்து கொடுமைப் படுத்துவதாக எஸ்ஐ வசந்த ராஜா மீது சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால் எனது புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

நடிகை
நடிகைக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா. நடிகைக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? நடிகை என்றால் கரிசனம் காட்டும் காவல்துறை சாதாரண பெண்ணான எனது புகாரை ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு பானுரேகா தனது வீடியோ மூலம் கமிஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications