திருநங்கைகளையும் விடவில்லை..ஷேர்சாட்டில் ரூட் விட்ட ‘ஸ்ரீதர்’! செல்போனை பார்த்து அரண்டு போன ’வைத்தி’

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை குறி வைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஷேர்சாட்டில் ரூட் விட்ட ‘ஸ்ரீதர்’! செல்போனை பார்த்து அரண்டு போன ’வைத்தி’

    சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி (26). இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதனால் ஆத்திரம் அடைந்த ஶ்ரீதர் வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு கணவர் வீட்டைவிட்டு சென்று உள்ளார். இதன்பின்னர் சில நாட்கள் கழித்து மனைவி கணவர் ஶ்ரீதரின் செல்போனை ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் சில ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதில் கணவர் ஸ்ரீதர் பிரபல இணையதளமான ஷேர் சாட் ஆப் மூலமாக பல கல்லூரி பெண்கள்,திருநங்கைகள் உள்ளிட்ட பலரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது

    பல பெண்களுடன் தொடர்பு

    பல பெண்களுடன் தொடர்பு

    .மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெண்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் ஆடியோக்கள் சிக்கி உள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி உடன் ஆப்பில் பேசி நம்பவைத்து நெருக்கமாக பழகியுள்ளார். அப்பெண் ஶ்ரீதரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து பெண்னை வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.

     பகீர் புகார்

    பகீர் புகார்

    பின்னர் அப்பெண்ணுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு தொழில் நிமித்தமாக செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை வந்து தங்கி இருந்துள்ளார்.மேலும் இந்த ஆப் வாயிலாக கல்லூரி மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அனைத்தும் தெரிந்து கணவரிடம் கேட்ட வைதீஸ்வரியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தலைமறைவாகியுள்ளார். எனவே முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றி வரும் தனது கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இதுகுறித்து வைதீஸ்வரி கூறுகையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், திருமணம் நடைபெற்று சில காலம் சேர்ந்து வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த 15 சவரன் நகைகளை அடகு வைத்து விற்பனை செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.எனவே அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+