தவறான சிகிச்சையால் பெண் பலி? “அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழைகள் சாகணுமா? ” - கொந்தளித்த சீமான்!
சென்னை : சென்னை போரூரில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமை எனத் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கருத்தடை செய்துகொண்ட பெண் பலி
சென்னையை அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி வினோதினி. வினோதினி போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் செய்துகொண்டார். இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வினோதினி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்து விட்டதாகக் குற்றம்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணி பெண் பலி
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த வினோதினி, சின்னபோரூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 30ஆம் தேதி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்தார் என அவரது கணவர் இரு குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். இதுகுறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். ஈடுசெய்ய முடியாத இழப்பினால் துயருற்றுள்ள வினோதினியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஏழைகள்
ஐம்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், வசதி படைத்த ஆட்சியாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தனியார் பெருமருத்துவமனைகளில் உயர்தரமான மருத்துவம் பெறுகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது.

தவறிய திமுக அரசு
கோடிக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகளில் படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியம் சிறிதுமின்றி மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் பல நேரங்களில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். திமுக அரசு அதனை முறையாகச் செய்யத் தவறியதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது.

1 கோடி துயர்துடைப்பு நிதி
எனவே, தமிழ்நாடு அரசு இனியும், இதுபோன்று அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான அறுவை சிகிச்சை செய்து உயிரிழப்பு ஏற்பட காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த வினோதினியின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் எனவும், இரு குழந்தைகளோடு பரிதவிக்கும் அவரது கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications