'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் காதல்! கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றுகிறார்! பாடகர் மீது இளம்பெண் புகார்
சென்னை: ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பாடகர் குருகுகன் மீது சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும், இப்போது சாதியை சொல்லி திருமணம் செய்ய மறுத்துவிட்டு வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் பெண், சென்னை எஸ் 1 செயிண்ட் தாமஸ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பிரபலமான குருகுகன் தன்னை திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கியதாகவும், தற்போது அவர் குடும்பத்துடன் மலேசியா செல்ல இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவரும், சரிகம உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான குருகுகன் ஒரு பப்ளிக் ஷோவில், கடந்த மே மாதம் பார்த்தார். பார்த்த உடனே என்னுடைய செல்போன் நம்பரை வாங்கினார். பிறகு என்னிடம் நட்பாக பேசினார். பெற்றோர் எனக்கு திருமண வரன் பார்ப்பதாகவும், எனக்கு உங்களை பிடித்து இருப்பதாகவும் கூறினார்.
நான் வேறு சாதி.. எனவே உங்கள் பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறினேன். அதற்கு அவர் சாதியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்றாலும் நான் உன்னை திருமணம் செய்வேன். வீட்டில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உன்னை தனிக்குடித்தனத்திற்கு அழைத்து சென்று உன்னை பார்த்து கொள்வேன் என்று கூறினார்.
ஜூலை மாதத்தில், இது இண்டென்ஷன் எதுவும் கிடையாது, நாம இனி எப்படியும் திருமணம் செய்துகொள்ளப்போறோம் என்று நெருங்கி பழகினார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதற்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் கர்ப்பத்தை கலைத்துவிடலாம் என்று சொன்னார். முன்பு நாங்கள் பேசிக்கொண்டபோது ஆகஸ்டு மாதத்தில் தான் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வோம் என்று பேசியிருந்தோம்.
கர்ப்பமாக ஆன போது, வா.. சொன்னபடியே இப்போது நாம ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் அவர் இப்போ வேண்டாம். கொஞ்ச நாள் கழித்து.. டைம் எடுத்துக்கொண்டு பண்ணிக்கொள்ளலாம் என்றார். ஏன் டைம் எடுக்க வேண்டும்?.. நானும் படித்து இருக்கிறேன்.. சம்பாதிக்கிறேன்.. லைஃபை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து என்னை அடித்தார்.
மேலும் கருவை கலைக்குமாறு கூறி அடிக்கடி, என்னை அடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து கருவை கலைத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என்று கூறினார். இதனால் நானும் சரி என்று கூறிவிட்டு.. கருவை கலைத்தேன். இதுக்கு அப்புறம் எங்க குடும்பத்தினரிடம் வந்து அவங்க குடும்பத்தினர் வந்து பேசினர். அப்போது சாதி தான் பிரச்சினை என்று சொன்னார்கள். மேரஜை பத்தியே பேசல. சாதியை பற்றி தான் பேசினாங்க. உங்க வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம் என்று சொன்னாங்க.
ஆனால் குருகுகன் அவங்க அப்பா அம்மா முன்னாடியே என்னை தான் திருமணம் செய்வேன் என்று சொன்னார். ஆனால் அவங்க குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை. அவனை என்னை தொடர்புகொள்ள முடியாமல் செய்துவிட்டாங்க.. இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவங்க வீடு பூட்டியிருந்தது. அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் போலீசிடம் வந்தேன்.
எங்க அப்பாக்கிட்ட கூட போன் செய்து ரெஜிஸ்டர் மேரேஜுக்கு சர்டிபிக்கேட் எல்லாம் கொண்டு வாரேன் என்று குருகுகன் சொன்னார். எனக்கு மேரேஜ் ஆக போகுது என்று அவங்க நண்பர்கள் குரூப்பில் கூட சொல்லியிருந்தார். ஆனால் அவங்க குடும்பத்தினர் தான் இப்போ என்னிடம் பேசவிடாமல் மலேசியாவுக்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க கூறினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications