குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 2ஆவது கணவரின் குடும்பம்.. பெண் பகீர் புகார்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில் பெண்ணைத் திருமணம் செய்து அவர் குளிக்கும் போது வீடியோ எடுத்து அதை காட்டி ரூ 20 லட்சம் ரூபாய் பறித்த ஆந்திராவை சேர்ந்த ஒரு குடும்பத்தை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சென்னையில் வசித்து வந்த இவர்கள் பைனான்ஸ், கட்டடம் கட்டும் ஒப்பந்தத் தொழில் செய்து வந்தனர். மகனின் பள்ளி ஆசிரியையுடன் கணவருக்கு தொடர்பிருப்பதை அறிந்த அந்த பெண் விவாகரத்து பெற்றுக் கொண்டு மகனுடன் தனியாக வசித்து வந்தார். அந்த நேரம் அந்த பெண்ணும், அவரது கணவரும் தொழில் ரீதியாக மட்டும் தொடர்பில் இருந்தனர்.

கணவருக்கு தொடர்பு
அப்போது ஆந்திர மாநில நெல்லூர்பாளையம் சந்திரபாடியம் என்ற பகுதியில் நடைபெற்ற கட்டடப் பணி தொடர்பாக சீனிவாச ரெட்டி என்பவருடன் அந்த பெண்ணின் கணவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் பழகிய சீனிவாச ரெட்டி குடும்ப விவகாரங்களைத் தெரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறி அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து பழகியுள்ளார்.

ஆந்திராவுக்கு வருகை
இதனிடையே பள்ளி ஆசிரியை ஆந்திராவுக்கு வந்து பெண்ணின் கணவரை சந்தித்துவிட்டு சென்றதை அறிந்ததால் அவர் கணவருடன் சேர மறுத்துவிட்டார். இதை சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சீனிவாச ரெட்டி, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 லட்சம் பணம்
இதை நம்பிய அந்த பெண் ஏற்கெனவே விவாகரத்து பெற்றுவிட்டதால் 2018இல் சீனிவாச ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். வரதட்சிணையாக 90 சவரன் நகை போட்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் சென்னை திருவொற்றியில் வசித்து வந்தனர். அப்பேது அரிசி வியாபாரத்திற்கு பணம் வேண்டும் என அந்த மனைவியிடம் இருந்து 14 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார்.

இரு மாதங்கள்
இதனிடையே அந்த பெண் கருவுற்றார். ஆனால் சீனிவாசரெட்டியோ எதை எதையோ சொல்லி அந்த கருவை கலைக்க சொல்லிவிட்டார். கடந்த இரு மாதங்களாக சீனிவாசன் வீட்டில் தங்காமல் வெளியூரிலேயே இருந்து வந்ததால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து
இதையடுத்து சென்னை மாதவரத்தில் முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா, உடன் பிறந்த சகோதரர் கிஷோர் ஆகியோருடன் ரெட்டி வசித்து வந்தது தெரியவந்தது. விவாகரத்து பெற்று விட்டதாக கூறி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து சீனிவாச ரெட்டியிடம் பெண் தகராறு செய்துள்ளார்.

நகைகள்
மேலும் வாங்கிய பணத்தையும் நகைகளையும் திருப்பி கேட்டார். ஆனால் சீனிவாச ரெட்டி தலைமறைவாகிவிட்டார். சீனிவாச ரெட்டியின் தாய் சந்திரகலா அந்த பெண்ணை வீட்டிற்கு வரும் படி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முதல் மனைவி பத்மாவதி விலக வேண்டுமானால் 8 லட்ச ரூபாய் தர வேண்டும் என சந்திரகலா, அந்த பெண்ணிடம் பேரம் பேசியுள்ளார்.

கிஷோர் மிரட்டல்
இதை நம்பிய அந்த பெண் ரூ 6 லட்சம் கொடுத்துவிட்டு 2 நாட்கள் மாமியார் சந்திரகலாவுடன் தங்கியிருந்தார். அப்போது சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துவிட்டார். பின்னர் அந்த பெண் வீடு திரும்பியவுடன் வாட்ஸ் ஆப்பில் வீடியோவை அனுப்பி பணம் , நகைகளை கேட்டு கிஷோர் மிரட்டியுள்ளார்.

காவல் துறையினர் தேடுதல் வேட்டை
இதையடுத்து அந்த பெண்ணின் புகாரை அடுத்து கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சீனிவாச ரெட்டி மீது திருப்பதி, நெல்லூர், உதயகிரி, ஓங்கோல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. சீனிவாச ரெட்டி, முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications