Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுங்கையூரில் கொடூரம்.. அத்தையை உறவுக்கு அழைத்த தம்பி மகன்.. வர மறுத்ததால் கொலை செய்த பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூரில் வீட்டில் அத்தையை உறவுக்கு அழைத்து அவர் வர மறுத்து கூச்சலிட்டதால் அவரை தம்பி மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை கொடுங்கையூரில் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (47). இவரது கணவர் அன்புடன் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்பு வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற போது அவருடைய மகன், மகள் யாரும் வீட்டில் இல்லை. வேளாண்கண்ணி மட்டுமே தனியாக இருந்தார். இந்த நிலையில் அவருடைய மகன் மரியா லாரன்ஸ் மாலை வீட்டிற்கு வந்ததும் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

Woman was brutally murdered by his son in law for not having relationship

இதனால் அதிர்ச்சி அடைந்த மரியா அக்கம்பக்கத்தில் இருப்போரை அழைத்தார். அவர்கள் வேளாங்கண்ணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொடுங்கையூர் தனிப்படை போலீஸார் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் வீட்டிற்குள் சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் யார் என உறவினர்களிடம் அடையாளம் காணப்பட்ட போது அவர்களில் ஒருவர் இறந்த பெண்ணின் தம்பி மகன் அகஸ்டின் அருண் (21) என்றும் மற்றொருவர் அவருடைய நண்பர் சாலமன் (22) என்பது தெரியவந்தது.

இருவரும் அத்தை வீட்டிற்கு டீ குடிப்பதற்காக சென்றனர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அகஸ்டின் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு திடீரென காம உணர்வு அதிகமானது. அந்த நேரம் பார்த்து என் நண்பருடன் அத்தை வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் மட்டும் வீட்டில் இருந்ததை அறிந்தேன்.

மேலும் எனக்கு அதிக உணர்வு ஏற்பட்டதால் அத்தையிடம் உல்லாசமாக இருக்கலாம் என கேட்டேன். உடனே அத்தை அதை கேட்டதும் என்னை திட்டினார். நான் உன் அத்தை என்னிடம் இப்படியெல்லாம் பேசலாமா என திட்டியுள்ளார். இதனால் எனது தாய், தந்தையிடம் அவர் சொல்லிவிடுவரோ என எனக்கு பயம் ஏற்பட்டது.

மேலும் அவருடன் உடலுறவு கொண்டால் என்னை அவர் சிக்க வைக்க மாட்டார் என்பதற்காக அவரை வலுக்கட்டாயமாக அடைய நினைத்தேன். அப்போது அவர் உறவுக்கு மறுத்தார். மேலும் கத்தி கூச்சல் போட்டார். இதனால் நான் சிக்கி கொள்வேனோ என்ற அச்சத்தில் அவரது தலையை சுவற்றில் மோதினேன், உடனே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். இதையடுத்து என் நண்பருடன் தப்பித்தேன். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+