சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம்.. பெண்களுக்கு ரூ.500 நிதி உதவி.. மத்திய அரசு அதிரடி!

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் நாடு முழுக்க கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் அவர்களின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் நாடு முழுக்க கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் அவர்களின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் என்று இந்த நிதி உதவி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Women beneficiaries under PM Jan Dhan Yojana will get Rs 500 in their account

இதன் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு அரசு உதவி தொகைகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் நாடு முழுக்க கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் அவர்களின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யான் என்று இந்த நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்து இருப்பவர்களின் வங்கி கணக்கு 0 அல்லது 1 என்று முடிந்தால் அவர்களுக்கு மே 4ம் தேதி இந்த 500 ரூபாய் செலுத்தப்படும். அவர்களின் வங்கி கணக்கு 2 அல்லது 3 என்று முடிந்தால் அவர்களுக்கு மே 5ம் தேதி இந்த 500 ரூபாய் செலுத்தப்படும். அவர்களின் வங்கி கணக்கு 4 அல்லது 5 என்று முடிந்தால் அவர்களுக்கு மே 6ம் தேதி இந்த 500 ரூபாய் செலுத்தப்படும்.

அவர்களின் வங்கி கணக்கு 6 அல்லது 7 என்று முடிந்தால் அவர்களுக்கு மே 8ம் தேதி இந்த 500 ரூபாய் செலுத்தப்படும். அவர்களின் வங்கி கணக்கு 8 அல்லது 9 என்று முடிந்தால் அவர்களுக்கு மே 11ம் தேதி இந்த 500 ரூபாய் செலுத்தப்படும். இந்த பணம் அவர்களின் கணக்கில் எப்போதும் இருக்கும். மக்களுக்கு தங்களுக்கு அவசியம் வரும் போது இதை எடுத்துக்கொள்ளலாம், அவசரப்பட்டு எடுக்க கூடாது என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

Women beneficiaries under PM Jan Dhan Yojana will get Rs 500 in their account

மே 11ம் தேதிக்கு பிறகு இந்த கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். வங்கியில் பணம் எடுக்கும் போது முறையாயாக் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் மூலமும் மக்கள் பணம் எடுத்துக்கொள்ள முடியும். மத்திய அரசின் அறிவிப்பின்படி ஏடிஎம்மில் தற்போது பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Women beneficiaries under PM Jan Dhan Yojana will get Rs 500 in their account says Central Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X