"சிசேரியன்".. அமைச்சரின் திடீர் அறிவிப்பு.. இதெல்லாம் பெண்கள் முடிவெடுக்கணும்.. சின்மயி பளிச்!
சிசேரியன் பிரசவங்கள் குறித்து சின்மயி கருத்து வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: விரும்பிய நேரத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கும் நிலையில், சின்மயி இதுகுறித்த தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.. சிசேரியன் செய்ய பல காரணங்கள் இருக்கும். என்ன காரணத்திற்காக என்று தெரியாமல், மொத்தமாக அதைத் தடுக்க முனைவது சரியானதல்ல என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்றார்.
அதுமட்டுமல்ல, விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெற்றெடுப்பது தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாகவும், ஆனால், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்புடையதல்ல என்றும் கூறினார்.

சுகபிரசவம்
இப்படி விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்த , தங்கள் நம்பிக்கைக்காக மகப்பேற்றினை மாற்றியமைக்க முயற்சிப்பது தவறானது என்றும் குறிப்பிட்டார்.

வரவேற்பு
அமைச்சரின் இந்த கருத்தும் அறிவிப்பும் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. அமைச்சர் மா.சு. சொன்னது நல்ல விஷயம்தான்.. வணிக நோக்கத்துடன் பல ஆஸ்பத்திரிகள் சிசேரியன் செய்துவிடுகிறார்கள்.. இதனால், தாய்- சேய் உயிர்களுக்கு பல நேரம் அபாயங்கள் வந்துவிடுகிறது.. மேலும், ஜாதகம் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, சகுனம் பார்த்து ஆபரேஷன் செய்யும் மூடநம்பிக்கை போக்கும் குறையும் என்று ஒருசாரார் இதை வரவேற்று பேசுகிறார்கள்.

சின்மயி
மேலும் சிலர், இதற்கு போதுமான வரவேற்பு தெரிவிக்கவில்லை.. குறிப்பாக சின்மயி இதை பற்றி தன் கருத்தினை பதிவிட்டுள்ளார்.. அதில், சிசேரியன் முறையில் பிரசவம் என்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் சொல்கிறார்.. ஆனால், இதை முடிவு செய்வது சம்பந்தப்பட்ட பெண்கள்தான்..

குழந்தை
ஜாதகம், நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நினைத்தாலும், இது பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. சிசேரியன் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது.. அந்த பெண்ணால் வலியை பொறுத்து கொள்ள முடியாமல்கூட சிசேரியன் செய்யலாம்.. பல்வேறு உடலியல் காரணங்கள் இதில் இருக்கலாம். எனவே, அதை கட்டுப்படுத்த முயல்வதும் சரியானதல்ல..

விருப்பம்
வலியை விரும்பாத பெண்களும் கூட சிசேரியனுக்கு போக முடிவெடுக்கலாம். அதேசமயம், "எங்க அம்மா, பாட்டி, நாங்க வலி பொறுத்துக்கலியா என்ன? என்பது போன்ற கருத்துகள் தேவையற்றவை.. இப்படி சொல்வது பெண்களாகவே இருந்தாலும், அதையெல்லாம் தயவுசெய்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சிசேரியன் குறித்து முடிவெடுக்க உரிமை, ஏன் என்றால் அது அவளுடைய கருப்பை.. அவளுடைய உரிமை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications