Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கேயாச்சும் இப்படி நடக்குமா.. ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள தெரு தெருவாக படையெடுத்த பெண்கள்

ரஜினிகாந்த்துக்கு நாகையில் வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் என்ற மந்திர சொல்லுக்கு இன்னமும் மாஸ் குறையாமல் உள்ளது என்பதை நாகை பெண்கள் நிரூபித்து வருகின்றனர்.. ஆம்.. கட்சியே தொடங்காத ரஜினிக்கு இப்போதே வாக்கு சேகரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

உடல்நிலை காரணம் காட்டி தற்போது ஒதுங்கி உள்ளார் ரஜினிகாந்த்.. அது நியாயமான மற்றும் அனைவரும் ஏற்க கூடிய காரணமே... இந்த விஷயத்தில் ரஜினியை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது.

Women collects vote for the party that Rajinikanth is going to start

அவரை கட்சிக்கு வரும்படி அழைத்து கொண்டிருக்கும் சிலர், மனிதாபிமானம் அடிப்படையிலாவது, இனியாவது இதை அணுக வேண்டி இருக்கிறது.. மற்றொரு புறம் ரஜினியே, மன்றத்தினருடன் கலந்தாலோசித்து கட்சி ஆரம்பிப்பது பற்றி அறிவிப்பேன் என்று சொல்லி உள்ளார்.

இது இப்போதைக்கு ரசிகர்களை ஆசுவாசப்படுத்த இப்படி சொன்னாரா? அல்லது நிஜமாகவே கட்சியை தொடங்க போகிறாரா என்று தெரியவில்லை. அவரது ரசிகர்களை பொறுத்தவரை, ரஜினி கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் மாற்றத்தை தருவார் என்றுதான் இந்த செகண்ட் வரை நம்பி கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், ஒரு சாரார் அவர் வீட்டு வாசலில் முழக்கமிட்டு கொண்டிருக்கிறார்கள்.. மற்றொரு சாரார் ரஜினி வருகையை எதிர்நோக்கி சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.. இதற்கு நடுவில் பெண்கள்படை ஒன்று கிளம்பி விட்டது... அவர்களாவது பரவாயில்லை, ஒரு அனுமானத்தில், ரஜினி வருகையை எதிர்நோக்கி உள்ளனர்.

Women collects vote for the party that Rajinikanth is going to start

ரஜினி கட்சியை ஆரம்பித்துவிடுவார் என்றே இந்த பெண்கள் கன்பார்ம் செய்துவிட்டனர்.. நாகப்பட்டினம் மகளிர் சுயஉதவி குழுவினர் வீடு வீடாக சென்று ரஜினிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம்.. வரும் சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களை சந்தித்து கேட்டு கொண்டு வருகிறார்களாம்.

உலக அதிசய நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது.. இதுவரை கட்சியே ஆரம்பிக்காத ஒருத்தருக்காக, பெண்கள் திரண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.. பொதுவாக, எந்த வேட்பாளர்களாக இருந்தாலும், இதுவரை செய்த சாதனைகளை லிஸ்ட் போட்டு வாக்கு கேட்பதுதான் வழக்கம்.. இல்லையானால், எதிர்க்கட்சிகளை குறை சொல்லி வாக்கு கேட்பது வழக்கம்.

ஆனால், இவர்கள் என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள்? ரஜினி இதுவரை மக்களுக்காக எந்த ஆர்ப்பாட்டத்தையும் செய்ததில்லை.. காவிரி பிரச்சனைக்குகூட திரையுலகம் சார்பாக நடந்த உண்ணாவிரதம்தானே தவிர, மக்களையும், மண்ணையும் பாதித்த பிரச்சனைக்கு நடுவீதியில் இறங்கியது கிடையாது.., இன்னும் சொல்லப்போனால், போராட்டம் செய்வதே இவருக்கு பிடிக்காது என்று சொல்லியவர்.

சாமான்ய மக்களை பாதிக்கும் தண்ணீர் பிரச்சனை உட்பட நீட் தேர்வு வரை எந்த கண்டன ஆர்ப்பட்டமோ, உண்ணாவிரதமோ, முழக்கமோ இட்டது கிடையாது.. இதை செய்யாததால்தான் தேமுதிக போன்ற கட்சிகளை மக்கள் ஒதுக்கிவிட்டனர்.. அப்படி இருக்கும்போது, தமிழக மக்களின் பக்கம் எந்த விதத்திலும் நிற்காத ரஜினிக்காக, பெண்கள் இப்படி வாக்கு சேகரித்து வருவது வியப்பாக இருக்கிறது.

இவ்வளவு காலம் ரசிகர்கள்தான் ரஜினிகாக காத்திருக்கிறார்கள் என்று நினைத்திருந்தோம்-. இப்போது பெண்களும் திரண்டு வருவது, ரஜினி மீதான நம்பிக்கையை அபரிமிதமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.. இதையாவது ரஜினி கருத்தில் கொண்டு, தெளிவான, உறுதியான, திடமான, நிலையான முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+