Women's day: 40 வயதை கடந்த பெண்களிடையே ஏற்படும் மாற்றங்கள்.. இதை நோட் பண்ணுங்க! இல்லைனா பிரச்னை தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நமது பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தினரின் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்தும் பெண்கள், தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த மாட்டார்கள். அதிலும் குறிப்பாக 40 வயதைக் கடந்துவிட்டால் பெண்கள் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும். அதில் கவனிக்க வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் நாம் பார்க்கலாம்.

இதய நோய், உடல் பருமன், எலும்பு ஆரோக்கியம் என 40 வயதுக்குப் பிறகு பெண்களின் உடலில் பல உடல்நிலை சிக்கல்கள் தெரியத் தொடங்கும். அவற்றைக் கவனத்தில் கொள்வது அவசியம். 40 வயதுக்குப் பிறகு பெண்களின் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணமாக இருக்கிறது. வயதாக வயதாக அதற்கேற்ப ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்த வேண்டிய 6 முக்கிய அறிகுறிகள் குறித்து நாம் பார்க்கலாம்.

Womens Day 2025 world

சோர்வு

சோர்வு (Chronic fatigue): 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே நாள்பட்ட சோர்வு அதிகம் இருக்கும்.. மாதவிடாய் நிறுத்தம் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இந்த சோர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், உடலில் போதுமான சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாமல் போய் ரத்த சோகை ஏற்பட்டு, அதுவும் கூட சோர்வைத் தூண்டலாம்.. இதனால் உடல் வலி, தூக்கமின்மை ஏற்படும் பாதிப்பும் ஏற்படும். 40-75 வயதுடைய பெண்களிடையே அத்தியாவசிய வைட்டமின் குறைபாடு ஏற்படுவதே இதற்குக் காரணம். எனவே, இதைக் கவனமாக நோட் செய்யுங்கள்.

உடல் வெப்பம் அதிகரிப்பு

அடுத்து உடல் வெப்பம் திடீரென அதிகரிப்பது. 40களில் பெரிமெனோபாஸ் ஏற்படும் சூழலில், இரவு நேரங்களில் உடல் வெப்பம் ஏற்பட்டு வியர்வை அதிகரிக்கிறது. இது பொதுவாக ஒரு பெண்ணின் கடைசி மாதவிடாய்க்கு முன்பு தொடங்கி 2 ஆண்டுகள் வரை இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு 4-10 ஆண்டுகள் வரை இது இருக்கும். இருப்பினும், காலம் செல்ல செல்ல இதன் தீவிரத்தன்மை குறையும். அதீத வியர்வை மற்றும் தோல் சிவந்து போவதோடு உடல் வெப்பநிலையும் உயரும். இதனால் வேகமான இதயத் துடிப்பு, தலைச்சுற்றலும் கூட ஏற்படும்.

ஹார்மோன் மாற்றம் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் குறைவதே இதற்கு முக்கிய காரணமாகும்.. இதனால் பெரிய ஆபத்து இல்லை என்றாலும் கூட இந்த மாற்றமும் ஏற்படுகிறது என்பதை நோட் செய்து கொள்ளுங்கள்.

மனச்சோர்வு

அடுத்து மனச்சோர்வு.. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே ஏற்படும் முக்கியமான பாதிப்பு மனச்சோர்வு. குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு இது அதிகமாக இருக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குக் காரணமே இல்லாமல் சோகம், நம்பிக்கையின்மை, விரக்தி ஆகியவை ஏற்படும். மேலும், கோபம் மற்றும் எரிச்சல், ஆர்வம் இழப்பு, தூக்கமின்மை, பதட்டம், சுய வெறுப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் பாலியல் உறவில் ஆர்வம் குறைதல் ஆகியவையும் ஏற்படும்.

நோட் செய்ய வேண்டியவை

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே மூச்சுத் திணறல் ஏற்படும். ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் (COPD), எம்பிஸிமா, நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் அல்லது நிமோனியா, இதய செயலிழப்பு, கார்டியோமயோபதி, டயஸ்டாலிக் செயலிழப்பு, சிஸ்டாலிக் வென்ட்ரிகுலர் செயலிழப்பு ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே அதிகரிக்கும். தொடர்ச்சியாகப் பல நாட்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

ஒற்றைத் தலைவலி

மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்களே முக்கிய காரணமாகும். மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகளில் ஏற்படும் மாற்றமே ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஒற்றைத் தலைவலி மிகவும் கடுமையானதாகவும், நீண்டதாகவும் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+