செங்கோட்டையன் முதல்ல.. அடுத்து தம்பிதுரை.. கசியும் ரகசியம்.. பாஜக ரிஸ்க்.. முறிகிறதா எடப்பாடி "உறவு"

தமிழக பாஜக அதிமுகவுடன் எம்பி தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்பில்லையா என்ற டவுட் கிளம்புகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் எம்பி தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது குறித்த ஆலோசனைகளை தமிழக பாஜக மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.. அத்துடன் சில முக்கிய அட்வைஸ்களை, நிர்வாகிகளுக்கு மாநில தலைமை வழங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

திராவிட கட்சிகளுடன் இணைந்துதான் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் என்பதை பாஜக அறியாமல் இல்லை.. அதனால்தான், அதிமுக தலைமையிலான கூட்டணி? அல்லது பாஜக தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணியா? என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது..

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.

 டோஸ்

டோஸ்

இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2024 தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை திரும்பிய அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் நேற்று முன்தினம், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. இதில், தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுப்பது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து இதில் அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்தி, அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்..

 2 மெசேஜ்

2 மெசேஜ்

மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அண்ணாமலை சில முக்கிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும், நிர்வாகிகளுக்கு வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, 2 விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாம்.. கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்தும், யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

 சாட்டையடி

சாட்டையடி

இன்னும் 16 மாதங்களுக்குள் தமிழக பாஜக தயாராக வேண்டும், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்பது உட்பட அண்ணாமலை விரிவாக பேசியதுடன், கட்சியில் இருந்து சிலர் நீக்கப்பட்டது தொடர்பாகவும் சில அறிவுறுத்தல்களை தந்திருக்கிறார்.. "யாராவது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினாலோ, ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கட்சிக்கு உழைக்க தயாராக இல்லாதவர்கள் தயவுசெய்து தானாகவே வெளியேறி விடுங்கள்.. இங்கே யாரையும் பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது" என்று கண்டிப்புடன் அண்ணாமலை கூறினாராம்.

 டீல் ஓகே?

டீல் ஓகே?

பிறகு கூட்டணி தொடர்பாக பேச்சு எழுந்தபோது, "அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க நேரிடும்.. அப்படி அவர்களுடன் கூட்டணி வைத்தால், இதற்கு முன்பு பெற்ற சீட்டைவிட அதிகமாக கேட்டு பெற வேண்டும்.. அதேசமயம், அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிவிட முடியாது.. நாம் தனித்து களமிறங்கவும் தயாராக இருக்க வேண்டும்.. காரணம், அதிமுகவே இப்போது பிளவுபட்டு உள்ளது.. உட்கட்சி பூசல் தீரவில்லை.. கட்சி யாருக்கு என்ற பஞ்சாயத்து கோர்ட்டிலும் உள்ளது, தேர்தல் ஆணையத்திலும் உள்ளது.. அதனால் நாம் யார் பக்கமும் இப்போதே ஓட முடியாது.

 கழண்ட அச்சாணி

கழண்ட அச்சாணி

இவ்வளவு பஞ்சாயத்துக்கள் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்.. மேலும், அதிமுகவின் மொத்த பலம் என்று கருதப்படும் இரட்டை இலை முடங்கவும் வாய்ப்புள்ளது.. அப்படி இலை இல்லாவிட்டால், அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் பலனில்லாமல் போய்விடும்.. அதனால், 2014 தேர்தலை போல, கடந்த முறை இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலை போல, நாம் தனித்து போட்டியிடவும் தயாராக வேண்டும்... தனித்து போட்டியிட்டாலே நம்மால் நிறைய தொகுதிகளை வெல்ல முடியும்.. எப்போதுமே கூட்டணியை நம்பிக் கொண்டும், கூட்டணி கட்சியாலேயே தொடர்ந்து அறுவடை செய்து கொண்டும் இருக்க முடியாது. தனித்து களமிறங்கி தொகுதிகளை வெல்ல, நம்மால் முடியும்" என்றெல்லாம் அண்ணாமலை அறிவுறுத்தியதாக தெரிகிறது.

 முறியும் அச்சாணி

முறியும் அச்சாணி

ஆனால், நடந்த சமாச்சாரமே வேறு என்கிறார்கள்.. கடந்த சில தினங்களாகவே தமிழக பாஜகவில் ஏகப்பட்ட உள்குத்து விவகாரங்களும், சலசலப்புகளும், பதவி நீக்கங்களும் நடந்து வரும் தகவல் டெல்லிக்கே போய்விட்டதாம்.. குஜராத்தில் அபரிமிதமான வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கும்போது, தமிழகத்தில் இப்படியெல்லாம் முணுமுணுப்புகள் வருவது, கட்சியின் இமேஜை சரித்துவிடக்கூடும் என்று, மாநில தலைமைக்கு டெல்லி மேலிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால்தான், அந்த கோபத்தை, இங்கு வந்து தமிழக நிர்வாகிகளிடம் ஏகப்பட்ட கறார்தன்மையையும், கண்டிஷன்களையும் மாநில தலைமை விதித்ததாக சொல்கிறார்கள்.

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

எப்படியோ, தமிழக பாஜக தன்னுடைய அடுத்தக்கட்ட அதிரடிக்கு தன்னை தயார் செய்து, வீறு கொண்டு எழுந்துள்ளதாகவே தெரிகிறது.. அதேசமயம், சில தினங்களுக்கு முன்பு, அதாவது அமித்ஷாவின் சென்னை வருகைக்கு பிறகு, அதிமுக தனித்துப் போட்டி என்ற அஸ்திரத்தை மறுபடியும் கையில் எடுத்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், அப்போது பாஜகவை மறைமுகமாகவும் தாக்கி பேசியிருந்தார்..

தம்பிதுரை

தம்பிதுரை

"வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவால் தனித்து நிற்க முடியும். வேறு எந்த கட்சியாலும் முடியாது... காரணம் அதிமுக ஓட்டு வங்கி அப்படியே இருக்கிறது... தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்கின்றனர்" என்று பேசியிருந்தார்.. 2 நாட்களுக்கு முன்பு பேசிய தம்பிதுரையும், "நாற்பதும் நமக்கே" என்ற ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று பேசியுள்ளார்.. இவர்கள் இருவரின் பேச்சுக்களும்கூட, மேலிட பாஜகவுக்கு பறந்துள்ளது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+