சென்னை பெசன்ட் நகர் பீச் அக்கா கடையில்.. பொரித்த மீனில் நெளிந்த புழுக்கள்! கடை ஓனர் பதிலை பாருங்க!
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆசை ஆசையாக வாங்கி சாப்பிட்ட மீன்களில் புழுக்கள் இருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மீன் துண்டுகளில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்து இதுபற்றி கடைக்காரரிடம் கேட்டபோது அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் பீச் அருகே உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்ட பொரித்த மீனில் புழுக்கள் இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடும்பத்தோடு உணவு வாங்கி சாப்பிட்டுகொண்டிருந்தபோது மீனில் புழுக்கள் இருப்பதை பார்த்து ஒரு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த உணவகத்தில் சென்று சாப்பிட்ட பிரேம் குமார் என்பவர் கூறியதாவது:- என் பெயர் பிரேம் குமார். சென்னை சூளைமேட்டில் இருந்து வந்திருந்தோம். சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு எனது இரண்டு குழந்தைகள், தம்பி, தங்கையோடு வந்தோம். அப்போது இங்குள்ள கடையில் பெரிய மீன் ஒன்று வாங்கி சாப்பிட்டோம். நாங்க எல்லாரும் அந்த மீனை சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது எனது மகன் மீனின் வயிற்று பகுதியில் பிய்த்த போது அதில் புழுக்கள் இருந்தன.
இதனை பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். உள்ளே பார்த்தபோது 200க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்தன. இதனால் எங்களுக்கு தலை சுற்றிபோனது. அவர்களிடம் உடனே சொன்னோம். அப்போது தலைப்பகுதியில் மட்டும் தான் இருக்கும் என்று சொல்லி நாங்க சாப்பிட்டுக்கொண்டிருந்த பிளேட்டை வாங்கி சென்றுவிட்டார். நாங்க இதை சொன்னால் அவங்க சரியாக பதில் அளிக்கவில்லை.
பக்கத்தில் இருந்த மற்றொரு அம்மா இது பற்றி கேட்கும் போது, இதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ விட்டுட்டு வேலைய பாரு.... என்று சொல்கிறார். உடனே நாங்க என்னவென்று போய் கேட்டதற்கு மீனை சாப்பிட்டுவிட்டீர்கள். என்ன எதிர்பாக்குறீங்க என்று கேக்குறாங்க. ரொம்ப அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். என் குழந்தைகளும் மீனை சாப்பிட்டு இருக்கிறார்கள்" என்றார்.
உண்ணும் உணவே மருந்து என்று சொல்வார்கள். இப்படி இருக்கையில் உணவினை தயார் செய்யும் உணவகங்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் கொஞ்சம் அக்கறையோடு செயலாற்றினால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கலாம். பணத்திற்கு என்று பார்க்காமல், நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை கொடுத்து மனசாட்சியோடு உணவு தயார் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications