மணிப்பூர் வன்முறை குறித்து பேட்டி.. கைதான எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை
சென்னை: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரியை 15 நாட்கள் காவலில் வைக்க குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கலவரம் குறித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் இவர் கருத்து தெரிவித்திருந்ததாக தெரிகிறது.
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவருடைய கருத்து இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியதற்கு பத்ரி அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்ரியின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக போலீசாரின் பணியா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது: கிழக்கு பதிப்பக உரிமையாளரும், எழுத்தாளருமான திரு. பத்ரி சேஷாத்ரி இன்று (29-7-2023) அதிகாலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யூ-டியூப் சேனல் ஒன்றில் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக அரசின் தவறுகளை, அடக்குமுறைகள் குறித்து யாரும் பேசிவிட, எழுதிவிடக் கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை எல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமை பற்றியெல்லாம் திமுகவினர் மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், 'இம்' என்றால் சிறைவாசம். 'ஏன்?' என்றால் வனவாசம் தான். இவ்வாறு வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications