டிரான்ஸ்லேஷனால் வந்த வினை.. தேசிய அளவில் அமைச்சர் மா.சுவை விமர்சிக்கும் வடஇந்தியர்கள்.. பரபரப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் வடஇந்திய மாணவர்கள்தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் சொன்னதாக இணையத்தில் தவறான கருத்து ஒன்று பரவி வருகிறது. இதையடுத்து அமைச்சர் மா. சுவை விமர்சனம் செய்து வடஇந்தியர்கள் போஸ்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று பேட்டி அளித்தார். அதில், கடந்த சில நாட்களாக ஐஐடி, அண்ணா பல்கலை, சக்தி சாய் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து கூடி வருகிறது. அதற்கான காரணம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. அப்படி இருக்கும் போது வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கு வரும் போது, அவர்களின் மூலம் ஒட்டுமொத்தமாக தொற்று பரவி தொடங்கி உள்ளது, என்றார்.

தனிமைப்படுத்துதல்
தனிமைப்படுத்துத்தல் விதி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறோம் என்று அமைச்சர்குறிப்பிட்டார். ஆனால் ஏஎன்ஐ உள்ளிட்ட ஊடகங்களில் இவரின் பேச்சை மொழி பெயர்க்கும் போது.. வடஇந்திய மாணவர்கள் தமிழ்நாட்டில் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று பழி சொல்லும் விதமாக செய்தி தவறாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது வடஇந்திய மாணவர்கள்தான் இங்கே வந்து கொரோனாவை பரப்புகிறார்கள் என்பது போல் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவிட்டது.

டிரான்ஸ்லேஷன்
இந்த நிலையில் தவறான டிரான்ஸ்லேஷன் காரணமாக வடஇந்தியர்கள் பலர் அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தினமும் 1000 கேஸ்கள் எல்லாம் ஏற்படவில்லை. நேற்று 100க்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஆனால் இதற்கும் கூட வடஇந்தியர்களை கை காட்டுவது சரியாக இருக்காது. வடஇந்தியர்கள் மீது புகாரை அள்ளி போடுவது சரியான நடவடிக்கை கிடையாது என்று நெட்டிசன்கள் பலர் கூறியுள்ளனர்.

வடஇந்தியர்கள்
இந்த நிலையில் முன்னதாக தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் வடஇந்தியர்களை பானிபூரி விற்பவர்கள் என்று கூறினார். அதேபோல் இப்போது இந்த அமைச்சர் கூறி இருக்கிறார். இதெல்லாம் ஆணவமான கருத்துக்கள். இது போன்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று வடஇந்தியர்கள் சிலர் குறிப்பிட்டு உள்ளனர். இன்னும் சிலர் ஏன் வடஇந்தியர்களை தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் வெறுக்கிறார்கள் என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விளக்கம்
வடஇந்தியர்கள் பலர் இதேபோல் போஸ்ட் செய்து வருகின்றனர். இதனால் தேசிய அளவில் north indian என்ற வார்த்தை தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழர்கள் பலர் இந்த ட்விட்களில் விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சரின் கருத்து தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதாக பலர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் அமைச்சர் சொன்னதை தவறுதான் என்று கூறி வடஇந்தியர்கள் பலர் அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை விமர்சித்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications