பிளாஷ் பேக் 2023: சறுக்கல்களை சாதனையாக்கிய சந்திரயான் 3.. 2023ல் மறக்க முடியாத சம்பவம் செய்த இஸ்ரோ
சென்னை: இந்த ஆண்டு கூகுளில் சந்திரயான் குறித்துதான் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளித்துறையில் சந்திரயான் 3 வெற்றியின் மூலம் இந்தியா மீண்டும் தன்னை வலுவாக நிலை நிறுத்தியுள்ளது. அந்த வகையில் 2023ம் இஸ்ரோவுக்கு எப்போதும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது.
ஆபத்து: ஒன்னுமே இல்லாத நிலாவுக்கு எதுக்கு உலக நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு ராக்கெட்டுகளை ஏவுகிறது என்று நமக்கு தோன்றலாம். ஆனால் உண்மை என்னவெனில், இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நீடித்து வாழ நிலாதான் மனிதர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமி மீது அதிக அளவில் விண்கற்களின் மோதலாம். ஒரு சில விண்கற்களை நம்மால் இப்போது இருக்கும் டெக்னாலஜி கொண்டு தடுத்துவிட முடியும். ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியையே அழிக்கும் அளவுக்கு பெரிய விண்கல் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே நாம் வேற்று கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

செவ்வாய்: அதற்கு பூமியிலிருந்து பயணிப்பதைவிட நிலவிலிருந்து பயணிப்பதுதான் சுலபம். உதாரணமாக செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகளை உருவாக்க முயன்று வருகிறோம். இதற்கு பூமியிலிருந்து செல்வதை காட்டிலும் நிலவிலிருந்து செல்வது ஈஸியான வேலை. மட்டுமல்லாது நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து, ஆக்சிஜனை சுவாசிக்கவும், ஹைட்ரஜனை எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும்.
நிலவு: அப்படியெனில் நிலவிலிருந்து சூரிய குடும்பத்தின் எந்த கிரகத்திற்கு வேண்டுமானாலும் எளிதாக ராக்கெட் அனுப்ப முடியும். எனவே நிலவை ஆக்கிரமிக்கும் போட்டி தீவிரமடைந்து வருகிறது. அதில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
பார்வை: சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அதுவரை இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்த்த உலகம், இந்த வெற்றிக்கு பின்னர் அதன் பார்வையை மாற்றிக்கொண்டது.
புதையல்: ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.
இஸ்ரோ: அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமான்ட் அதிகம்.
மைனஸ் 200 டிகிரி: சல்பரும் வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் நிலவை காலணிப்படுத்த முயலும் போது இந்த தனிமங்கள் நிச்சயம் பயன்படும். இதையெல்லாம் கண்டுபிடித்து சொன்ன பின்னர் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உறக்க நிலைக்கு சென்றன. நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும். எனவே உறக்க நிலைக்கு சென்ற ரோவரை மீண்டும் எழுப்ப முடியாமல் போனது.
இருப்பினும் சந்திரயான் 3 விண்கலன் 2023ம் ஆண்டு செய்த சாதனை, விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு என தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் 2023ம் ஆண்டு இஸ்ரோவுக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications