சென்னையில் ட்ரோன் பைலட்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்.. ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்
சென்னை: இன்றைய காலகட்டத்தில் ட்ரோன் பயன்பாடு என்பது மிக அதிகமாவிட்டது. முன்பு ராணுவம் மட்டுமே பயன்படுத்தி வந்தது. இப்போது கல்யாணம், காது குத்து, ஊர் திருவிழா, விவசாயத்திற்கு மருந்து தெளிக்க, மலைப்பகுதிகளை வீடியோ எடுக்க என்று பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுகிறது. ட்ரோனை இயக்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி பெற்றவர்கள் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
முன்பு ஜிம்மி ஜிப் போட்டு, கிரேன் போட்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை இன்றைக்கு ட்ரோன் மூலம் அளிதாக எடுக்க முடிகிறது. யாரும் செல்ல முடியாத இடங்களில் கூட ட்ரோன் கேமரா செல்கிறது. இதன் காரணமாக ட்ரோன் கேமரா பயன்பாடு அதிகரித்துவிட்டது. ட்ரோன் கேமரா இல்லாத கல்யாண வீடுகளை பார்க்க முடியாது. ட்ரோன் கேமரா இல்லாத காது குத்து விழாக்களையே, வீட்டு விஷேசங்களையோ பார்க்க முடியாது.. இதேபோல் அரசியல் கட்சிகள் மாநாடு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ட்ரோன் கேமரா பயன்பாடு அதிகமாக உள்ளது.

ட்ரோன்கள் ஆள் இல்லா விமானங்களாக உளவு பார்க்க பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் ட்ரோன்கள் பொருட்களை டெலிவரி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ட்ரோன்கள் தான் விவசாயத்தில் மருந்து தெளிப்பதற்காக பயன்படுகிறது. இப்படி பல்வேறு பயன்பாடுகள் காரணமாக டிரோனை வாடகைக்கு விடுவோர், டிரோனை இயக்குபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு பலரும் டிரேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் செயல்முறைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் ஆளில்லா விமான பயிற்சி நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இதர மாநிலங்களில் இருந்து சுமார் 1,500-க்கு மேற்பட்டோரும் பயிற்சி பெற்றுள்ளார்கள். ட்ரோனை இயக்கும் பயிற்சி பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் இதுவரை ஏராளமான பட்டதாரிகள் பயிற்சி எடுத்துள்ளார்கள். 500-க்கும் மேற்பட்ட பெண்களும் பயிற்சி எடுத்துள்ளார்கள்.
குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. வளாகத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதைவைத்து அவர்கள் ட்ரோன் பைலட்டுகளாக மாறி உள்ளனர். அந்த டிரோனுக்கு மானியமும், 6 சதவீத வட்டியில் வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. ட்ரோன் பயிற்சியாளர்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாக தகவலகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒரு ட்ரோன் பயிற்சி எடுத்தால் சுயவேலைவாய்ப்பு பெறலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications