இவ்வளவு அபராதம் விதிப்பாங்களா? உங்க கிட்ட ஆதார் அட்டை இருக்கா.. அப்போ மறக்காம இதை முதல்ல படிங்க!
சென்னை: ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் போது தவறுதலான விவரங்களை கொடுத்தால் உங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இப்படி பல சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் ஆகிவிட்டது. ஆதார் கார்டு இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

ஆதார் அட்டை அனைத்து சேவைகளுக்கும் அவசியம் ஆகிவிட்டதால், ஆதார் அட்டையில் இனி மாற்றங்கள் செய்தால் அது மற்ற அட்டைகளில் எதிரொலிக்கும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறதாம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறதாம். தற்போது இருக்கும் முறைப்படி ஆதார் அட்டையில் விலாசம் மாற்றினால் அது மட்டுமே மாறும்.
ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் விலாசம் மாற்ற வேண்டும் என்றால் தனி தனியாக செல்ல வேண்டும். இதற்காக தனி தனி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். இது பெரிய அலைச்சலை கொடுக்கும் வேலை ஆகும். ஒவ்வொரு முறையும் விலாசம் மாறும் போது இந்த அலுவலகங்களுக்கு எல்லாம் சென்று விலாசம் மாற்றுவது இயலாத காரியம்.
ஆனால் இனி ஆதாரில் விலாசத்தை மாற்றினால் அனைத்து அட்டைகளிலும் விலாசம் மாறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது.

அபராதம்:ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் போது தவறுதலான விவரங்களை கொடுத்தால் உங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று ஆதார் UIDAI அமைப்பு தெரிவித்து உள்ளது.
1. நீங்கள் ஆதாரில் விவரங்களை மாற்ற ஒரு அப்ளிகேஷனை நிரப்ப வேண்டும்.
2. இதில் தவறுதலாக நிரப்பினால் உங்களுக்கு 1000 ரூபாய் வர அபராதம் விதிக்கப்படும். தவறுதலாக நிரப்பி, அந்த விவரம் ஆதார் அட்டையில் ஏற்றப்பட்டால் மீண்டும் விவரங்களை மாற்ற 1000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
3. அதுவே ஆதார் தனியார் சேவை மையம் இதே தவறை அவர்கள் பக்கம் இருந்து செய்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும்.
4. தேவையின்றி ஆதார் விவரங்களை மாற்றுவது உள்ளிட்ட ஏமாற்று வேலைகளை தடுப்பதற்காக இந்த அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
5. பொதுவாக ஆதார் சேவை மையங்களுக்கு ஒவ்வொரு சேவையிலும் 36 ரூபாயை UIDAI கொடுக்கிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் அடிக்கடி அப்டேட் செய்து ஏமாற்றி பணம் வசூலிக்க கூடாது என்பதால் இந்த அபராத முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
6. ஆதார் அட்டையில் விலாசம் மாற்ற மட்டுமே உள்ளூர் கெஸட் அதிகாரியின் கையெழுத்து உள்ள ஆவணம் தேவை. மற்றவற்றிற்கு அரசு ஆவண ஆதாரங்கள் தேவை ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications