ஒரே டார்ச்சர்.. பீச்சில் ராத்திரி 8 மணிக்கு அலறிய பெண்.. எகிறி தப்பி ஓட்டம்.. 2 பேரை தூக்கிய போலீஸ்

இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த பெண்ணை பார்த்தாலும், "என் பொண்டாட்டி என்னை விட்டுட்டு ஓடிப்போட்டா" என்று சொல்லி அழுது புலம்பும் ஒரு சைக்கோ பேர்வழியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

புளியந்தோப்பு கேஎம்கார்டன் பகுதியை சேர்ந்தவர் வைஷாலி.. 19 வயதாகிறது.. பிளஸ் 2 படித்துள்ளார்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர் வேலை முடிந்து இரவு 7 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போதுதான் தினேஷ் அங்கு ஒரு ஆட்டோவில் வந்தார்.. அவர் வைஷாலியின் தெருவுக்கு பின்பக்க தெருவில் வசித்து வருபவர்.. 28 வயதாகிறது.

 இளம்பெண்

இளம்பெண்

வைஷாலியை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தி, நான் உங்க வீட்டு வழியாகத்தான் போறேன்.. வாங்க இறக்கிவிட்டுவிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. தெரிந்த நபர்தானே என்று வைஷாலியும் அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டார். உடனே, ஆட்டோவை ஓட்டிவந்த தன்னுடைய நண்பர் இம்ரானிடம், ஆட்டோவை பீச்சுக்கு விடும்படி தினேஷ் சொன்னார்..

கதறல்

கதறல்

இதனால் வைஷாலி கதறி உள்ளார்.. ஆனாலும் வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு, பீச்சில் வைத்து தன் சோக கதையை சொல்ல ஆரம்பித்துள்ளார் தினேஷ்.. "என்னை விட்டுவிட்டு என் மனைவி ஓடிப்போய்விட்டாள்.. அவள் நினைவாகவே இப்போதும் இருக்கிறேன், ஆனால் உன்னை பார்த்தால் என் மனைவி போலவே உள்ளது" என்றும் சொல்லி காதல் டார்ச்சர் தர ஆரம்பித்துள்ளார்... பிறகு, திடீரென கத்தியை எடுத்து, தன்னுடைய கையை கிழித்து கொண்டு, இப்போ என்னை காதலிக்கிறாயா சொல் என்று கேட்டார்.

கடத்தல்

கடத்தல்

இதனால் வைஷாலி அலறி உள்ளார்.. உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்து வீட்டுக்கும் தகவல் சொன்னார்.. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த தினேஷ், வைஷாலியை அதே ஆட்டோவில் தள்ளி, வேகமாக ஓட்ட சொல்லி கடத்த முயன்றுள்ளார்.. கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் அருகே டிராபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டது.. அதனால், ஆட்டோ அந்த டிராப்பிக்கில் சிக்க கொண்டு மெதுவாக போக ஆரம்பித்தது.. இதை பயன்படுத்தி கொண்டு, ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து வைஷாலி தப்பி ஓடினார்..

 தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

அங்கு ரோட்டோரம் பல வீடுகள் இருந்தன,.. ஒவ்வொரு வீடாக கதவை தட்டி உதவி கேட்டார்.. இறுதியில் ஒருவீட்டில் அடைக்கலம் தந்தார்கள்.. அந்த வீட்டில் இருந்தவர்களின் செல்போனை வாங்கி, தன்னுடைய வீட்டுக்கும் தகவல் கொடுத்தார்... அதற்குள் மகளை காணோம் என்று, புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்து கொண்டிருந்தனர் வைஷாலியின் பெற்றோர்..

புகார்

புகார்

வைஷாலி போன் வந்ததும், அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் தகவலை தெரிவித்தனர்.. அந்த வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படியும், 10 நிமிஷத்தில் போலீசுடன் வந்துவிடுவதாகவும் பெற்றோர், மகளுக்கு நம்பிக்கை தந்தனர். இதையடுத்து, அந்த வீட்டிற்கு சென்று, வைஷாலியை போலீசாரும் பத்திரமாக மீட்டனர்... தினேஷ் குறித்து வைஷாலி சொன்ன தகவல்களை சேகரித்து கொண்டனர் போலீசார்..

கைது

கைது

மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கொண்டும் ஆய்வு நடத்தினர்.. அதற்குள் தினேஷ் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.. அங்கு விரைந்து சென்ற போலீசார், தினேஷ், ஆட்டோ டிரைவர் இம்ரான் 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் தினேஷ் குறித்த விவரங்கள் தெரியவந்தது.

கஞ்சா

கஞ்சா

இவர் ஒரு கஞ்சா ஆசாமி.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.. ஒரே ஏரியா என்பதால், வைஷாலியை ரொம்ப நாளாகவே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.. அதனால்தான் அன்றைய தினம் பீச்சுக்கு கடத்தும்வரை துணிந்துள்ளதாக தெரியவந்தது. அதுமட்டுமல்ல, எந்த பெண்ணை பார்த்தாலும் இப்படித்தான் மனைவி போலவே இருக்கிறாய் என்று சொல்லி டார்ச்சர் தருவாராம்.. இந்த சைக்கோ ஆசாமியிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+