என் கூட மட்டும்தான்.. டெய்லி சண்டை போட்டேன்..கடைசியில் எரிச்சுட்டேன்.. ஆஷாவின் திகில் வாக்குமூலம்

போலீஸ்காரரை எரித்து கொன்ற பெண் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிர வைத்த ஆஷா.. உயிரை விட்ட வெங்கடேஷ்!

    சென்னை: "உறவுன்னா, அது என்கூட மட்டும்தான்.. என்னை தவிர எந்த பொண்ணு கிட்டயும் பேசக்கூடாது" இதைதான் அவர்கிட்ட தினமும் சொல்லி சண்டை போட்டேன்.. ஆனால், வேற ஒரு பொண்ணுகூட அவருக்கு தொடர்பு இருப்பது போல தெரிந்தது.. அதனால்தான் எரித்து கொன்றேன்" என்று கள்ளக்காதலி ஆஷா போலீசில் தெரிவித்துள்ளார்.

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். 30 வயதாகிறது. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர்.

    திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த வெங்கடேசுக்கு ஆஷா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆஷா ஏற்கனவே கல்யாணமாகி பிள்ளைகளை பெற்றவர். அவரும் அவர் குடும்பத்தை விட்டுவிட்டு, வெங்கடேசுடன் ஒரே வீட்டில் தம்பதி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

    சந்தேகம்

    சந்தேகம்

    ஆரம்பத்தில் இந்த கள்ளக்காதல் இனிக்கவே செய்தது.. ஆனால் நாள் ஆக ஆக இவர்களுக்குள் புயல் அடிக்க தொடங்கியது. ஆஷாவுக்கு வெங்கடேசன் மீது நிறைய சந்தேகம் வந்தது. தன்னை தவிர வேறு சில பெண்களுடன் வெங்கடேசனுக்கு உறவு இருப்பதாக ஆஷா நினைத்தார்.

    ஆராய்ச்சி

    ஆராய்ச்சி

    அதனால் வெங்கடேசன் தூங்கிய பிறகு அவரது செல்போனை எடுத்து தினமும், யார் யாருடன் போன் பேசியிருக்கிறார், என்ன மெசேஜ் வந்திருக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். "என்னை தவிர வேற எந்த பொண்ணு கூடவும் பேசக்கூடாது" இதுதான் ஆஷாவின் ஒரே கறார் பேச்சாக இருந்துள்ளது. இதனாலேயே இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.. மனம் நொந்துபோன வெங்கடேசன் இரவில் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

    வெங்கடேசன்

    வெங்கடேசன்

    சம்பவத்தன்றும் நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு, 12 மணிக்கு வீட்டுக்கு வரவும், திரும்பவும் ஆஷா தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வெங்கடேசன், "என்னை இப்படியே நீ டார்ச்சர் பண்ணினா, போலீஸ்ல நான் புகார் தந்துடுவேன், இல்லேன்னா தற்கொலை செய்துப்பேன்" என்று ஆஷாவிடம் சொல்லி வந்துள்ளார். இப்படி சொல்லிபிறகுதான் தூங்க போயுள்ளார்.

    பெட்ரோல்

    பெட்ரோல்

    மகள் பெட்ரூமில் தூங்க, ஹாலில் வந்து படுத்துள்ளார் வெங்கடேசன். ஒரு மணி வரை ஆவேசத்தில் இருந்த ஆஷா, இதற்கு பிறகுதான், வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த பைக்கில் இருந்துபெட்ரோலை எடுத்துவந்து ஊற்றி கொளுத்தி உள்ளார். உடம்பெல்லாம் தீ பற்றி எரியவும், இதை பார்த்து ஆஷாவுக்கே மனசு மாறியுள்ளது.. தண்ணீரை கொண்டு வெங்கடேசன் உடம்பில் பற்றிய தீயை அணைத்துள்ளார்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    ஆனால் அதற்குள் உடம்பெல்லாம் வெந்துபோய் விட்டது. 80 சதவீத தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்துவிட்டார். "அவர் வேற ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது போல எனக்கு சந்தேகம் இருந்தது.. என்னை தவிர அவர் வேற யார்கூடனும் பேசக்கூடாது, பழகக்கூடாதுன்னு நினைச்சேன்.. அதை தாங்க முடியாமல்தான் எரிச்சிட்டேன்" என்று ஆஷா போலீசில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+