பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம் பெண்.. குவிந்த மக்கள்.. சென்னையில் பரபரப்பு!
சென்னை கூவம் ஆற்றில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: பச்சை கலர் நைட்டியில்.. கூவத்தில் மிதந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இதனால் எழும்பூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வழியில் கூவத்துக்கு நடுவே ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் இன்று காலை 9 மணி அளவில் ஒரு பெண்ணின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாலத்துக்கு அடியில் சடலம் இருந்ததால், ஏணி வைத்து, அதன்மூலம் கயிறு கட்டி மேலே இழுத்து தூக்கினர்.
உயிரிழந்த பெண் சிகப்பாக இருக்கிறார். 22 வயது இருக்கும் என தெரிகிறது. பச்சை கலர் நைட்டி அணிந்திருக்கிறார். கழுத்தில் பாசிமணி உள்ளது. அழகான தோற்றம் கொண்ட இந்த பெண் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. நைட்டியுடன் இருப்பதால், அநேகமாக சென்னைவாசியாகத்தான் இருக்க முடியும் என தெரிகிறது.
ஆனால் இவரை கொலை செய்து வீசிவிட்டார்களா, அல்லது, இவரே கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியாததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இப்போதைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பெண்ணின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இது கொலையா, தற்கொலையா என உறுதி ஆகும். பெண்ணின் சடலம் கூவத்தில் ஒதுங்கியதையடுத்து, பொதுமக்கள் பலர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications