உங்களுடைய திகார் பயம் புரிகிறது.. ப.சிதம்பரத்துக்கு தமிழிசை பதிலடி!
Recommended Video
சென்னை: தேர்தல் முடிவு பிரதமர் மோடிக்குதான் சாதகமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நாளை இறுதிக்கட்டமாக நடைபெறுகிறது, இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நேற்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரச்சாரத்தின் போது ஆதரவு தெரிவித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
|
குற்றம்சாட்டவே
இந்நிலையில் மோடி - அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். அதாவது, தேர்தல் முடிவுகள் தவறாக இருந்தால் அமித் ஷாவை குற்றம்சாட்டவே பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மோடிதான் அடுத்த பிரதமர்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, தேர்தல் முடிவு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் தேர்தல் முடிவு மோடிக்கு ஆதரவாகதான் இருக்கும். அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்.
|
திகார் பயம் புரிகிறது
நீங்கள் காங்கிரஸ் தோல்விக்கு உங்கள் பலிக்கடாக்கள் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். பட்டியலில் பிறழ்வாய் மணி சங்கர் அய்யர், பிட்ரோடா, திக்விஜய் சிங் ஆகியோர் உள்ளனரா? மோடிதான் மீண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் 26வது முறையாக ஜாமீன் பெற முடியாது. ப.சிதம்பரம் அவர்களே உங்களின் திகார் பயம் புரிகிறது. இவ்வாறு தமிழிசை தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

அடுத்த பிரதமர் யார்?
நாளை 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது உறுதியாகிவிடும்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications